Published:Updated:

``நீங்கள் ஏன் கீவ்-க்கு வர மறுக்கிறீர்கள்?!”-போரிஸ் ஜான்சனிடம் பெண் பத்திரிகையாளர் கண்ணீர்க் கேள்வி

போரிஸ் ஜான்சன்

``இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் உக்ரைன் பெண் பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் ஏன் போருக்கு பயப்படுகிறீர்கள்?” என்று உக்ரைனின் பெண் பத்திரிகையாளர் கண்ணீர் மல்கக் கேள்வி கேட்டார்!

``நீங்கள் ஏன் கீவ்-க்கு வர மறுக்கிறீர்கள்?!”-போரிஸ் ஜான்சனிடம் பெண் பத்திரிகையாளர் கண்ணீர்க் கேள்வி

``இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் உக்ரைன் பெண் பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் ஏன் போருக்கு பயப்படுகிறீர்கள்?” என்று உக்ரைனின் பெண் பத்திரிகையாளர் கண்ணீர் மல்கக் கேள்வி கேட்டார்!

Published:Updated:
போரிஸ் ஜான்சன்

உக்ரைன்- ரஷ்யா போர் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்குத் தங்களது கண்டனத்தை முன்வைத்துவருகின்றன. ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை பற்றி விவாதிப்பதற்காக போலாந்து நாட்டுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் மேற்கொண்டார். அப்போது உக்ரைன் எல்லையிலிருந்து தப்பிவந்த பெண் பத்திரிகையாளர் டாரியா கலேனியுக், போரிஸ் ஜான்சனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

டாரியா கலேனியுக், ``ரஷ்யப் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டில் வசிக்கும் அப்பாவி மக்களைக் கடுமையாகத் தாக்கிவருகின்றன. அதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, ``நீங்கள் போலந்துக்கு வருகிறீர்கள். ஆனால் கீவ்-க்கு ஏன் வரவில்லை? நீங்கள் போருக்கு பயப்படுகிறீர்கள். நேட்டோ, ஐரோப்பிய நாடுகள் மூன்றாம் உலகப் போருக்குப் பயப்படுகின்றன. ஆனால் மூன்றாம் உலகப்போர் எங்களுக்கு ஏற்கனவே தொடங்கிவிட்டது. உக்ரைனில் உள்ள குழந்தைகள் குண்டுவெடிப்புக்கு மத்தியில் பயந்துகொண்டு வாழ்ந்துவருகின்றனர். இதுதான் தற்போதைய உக்ரைன் மக்களின் நிலைமை” எனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு பதிலளித்துப் பேசிய போரிஸ் ஜான்சன், ``நீங்கள் விரும்பும் வகையில் உதவுவதற்கு எங்களால் முடியவில்லை என்பதை நேர்மையுடன் ஒத்துக்கொள்கிறேன். ரஷ்யாவுடன் நேரடிப் போரில் ஈடுபட்டால் அதனுடைய பின்விளைவுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism