Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி உய்யலாலா!

ஊரக உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றுவதன் நுணுக்கம் குறித்து கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப்போல் பாடம் எடுத்தாலும், உங்கள் மரமண்டைகளுக்கு ஏறவில்லையா?’

உள்ளாட்சி உய்யலாலா!

ஊரக உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றுவதன் நுணுக்கம் குறித்து கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப்போல் பாடம் எடுத்தாலும், உங்கள் மரமண்டைகளுக்கு ஏறவில்லையா?’

Published:Updated:
உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி உய்யலாலா!

குடும்பச் சொத்தா மேல்மருவத்தூர்?

உள்ளாட்சி உய்யலாலா!

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளார் மனைவி லட்சுமியும், மாற்று வேட்பாளராக அவரின் மகன் செந்திலும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். தனது சொத்து மதிப்பு ரூ.25.57 கோடி என்று லட்சுமியும், ரூ.27.56 கோடி என்று செந்திலும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்கள். கடந்த 1996-2006 வரை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டிருந்தார் லட்சுமி. இந்த ஊராட்சி கடந்த பத்து வருடங்களாகப் பட்டியல் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பொதுப் பிரிவினருக்கு மாற்றப்பட்டதை அடுத்து, லட்சுமி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவரே ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இதையடுத்து, ‘‘மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் தரப்பினருக்கு பள்ளி, கல்லூரி, திருமண மண்டபம், மருத்துவமனை, வணிக வளாகம் ஆகியவை உள்ளன. நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏராளமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதனால், அந்தப் பகுதியின் அதிகாரம் தங்கள் கைக்கு வந்தால் கூடுதல் பலம் என்பதற்காக வேறு யாரையும் மனுத்தாக்கல் செய்யவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்’’ என்று சொல்லும் அவரை எதிர்க்கத் துணியாத உள்ளூர் அரசியல்வாதிகள், ‘‘மேல்மருவத்தூர் என்ன அவர்களின் குடும்பச் சொத்தா?’’ என்று கொந்தளிக்கவும் செய்கிறார்கள்.

காரணம் காழ்ப்புணர்ச்சியா?

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்திலிருக்கும் அம்முண்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவி, பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து ஊர்கூடித் தேர்தலைப் புறக்கணிக்க தீர்மானம் போட்டிருக்கிறார்கள். ‘‘சாதி துவேஷம்தான் காரணமா?’’ என்று விசாரிக்கச் சென்றால், ‘‘இல்லவே இல்லை’’ என்று அடித்துச் சொல்லும் அம்முண்டி மக்கள், ‘‘இந்த ஊராட்சியில் மொத்தம் 2,045 வாக்குகள் இருக்கின்றன. இவற்றில், பட்டியல் சமூக வாக்குகள் மூன்று மட்டுமே இருக்கின்றன. அதிலும் பெண்கள் வாக்குகள் இரண்டுதான். மற்ற அனைத்தும் பொதுப்பிரிவு வாக்குகள். இங்கு எப்போதுமே தி.மு.க-வுக்கு வாக்குகள் விழுவதில்லை. இந்தக் காழ்ப்புணர்ச்சியால் இப்படி மாற்றிவிட்டார்கள்’’ என்கிறார்கள். வேட்புமனுத் தாக்கலுக்காக கடைசி தேதியும் முடிவடைந்த நிலையில், இதுவரை அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர்கூட மனுத்தாக்கல் செய்யவில்லை.

உள்ளாட்சி உய்யலாலா!

கனிமொழி ரெக்கமண்டேஷன்... உற்சாகத்தில் எட்வின்!

நெல்லை கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பிலிருக்கும் ஆரோக்கிய எட்வின், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் போட்டியிட விரும்பிய வார்டை மற்றொரு கட்சிக்காரருக்கு ஒதுக்கிவிட்டதாகத் தகவல் கசிந்ததால் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கனிமொழி எம்.பி-யிடம் முறையிட, அவருக்கு இரட்டை ஜாக்பாட் அடித்தது. ஆரோக்கிய எட்வினுக்கு மட்டுமல்லாமல், அவரின் மனைவி சௌமியாவுக்கும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், ‘‘ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி நம்ம குடும்பத்துக்குத்தான்’’ என்று உற்சாகத்தில் இருக்கிறாராம் ஆரோக்கிய எட்வின்.

உள்ளாட்சி உய்யலாலா!
உள்ளாட்சி உய்யலாலா!

‘‘துரைமுருகனை தூரத்தில் நின்னுதான் வணங்கணும்!’’

‘‘ஊரக உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றுவதன் நுணுக்கம் குறித்து கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப்போல் பாடம் எடுத்தாலும், உங்கள் மரமண்டைகளுக்கு ஏறவில்லையா?’’ என்று தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளரான கே.பி.முனுசாமி பொரிந்து தள்ளுவதால், அப்செட்டில் இருக்கிறார்கள் வேலூர் அ.தி.மு.க-வினர். இது போதாதென்று ஆளுங்கட்சியின் துரைமுருகனையும் வம்புக்கு இழுத்திருக்கிறார் கே.பி.முனுசாமி. ‘‘இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் அமைச்சர் துரைமுருகன். தொகுதி மக்கள் அவரை தூரத்தில் நின்றுதான் வணங்கும் நிலை இருக்கிறது. இவர்களைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொன்னாலே 100 சதவிகித வெற்றியை எட்டிவிடலாம்’’ என்று அவர் பங்கேற்கும் கூட்டங்களிலெல்லாம் துரைமுருகனை வெளுத்துவாங்குகிறார். ‘‘சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வைக் கொண்டுவரக் காரணமாக இருந்தவர் கே.பி.முனுசாமி. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியிலிருந்து பா.ம.க வெளியேறியதற்கு துரைமுருகன்தான் காரணம் என்று முனுசாமி நினைப்பதால்தான், அவரை கார்னர் செய்கிறார்’’ என்று காரணம் சொல்கிறார்கள்.

அப்செட்டில் கிரகாம்பெல்!

நெல்லை மாவட்ட தி.மு.க-வில், மாநில வர்த்தகரணி இணைச் செயலாளராக இருக்கும் கிரகாம்பெல் ஒரு கோஷ்டியாகவும், நெல்லை எம்.பி-யான ஞானதிரவியம், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் மற்றொரு கோஷ்டியாகவும் பிரிந்து செயல்பட்டுவருகிறார்கள். மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பதவி வகித்திருந்த கிரகாம்பெல், இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, தன் தம்பி திவாகருக்கு வாய்ப்பு கேட்டிருந்தார். அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்படவே... கிரகாம்பெல் இது குறித்து நெல்லை மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களான அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கீதா ஜீவன், மனோ தங்கராஜ் ஆகியோரிடம் முறையிட்டார். அதன் பின்னரே கிரகாம்பெல் தம்பி திவாகருக்கு வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஒரு வார்டில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதே ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மற்றொரு வார்டில் ஞானதிரவியத்தின் மகன் சேவியர் செல்வராஜா போட்டியிடுகிறார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கும் போட்டிக்கு ஆள் இருப்பதால், ‘‘மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்குக் குறிவெச்சா, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகூட கிடைக்காதுபோலிருக்கே!’’ என்று புலம்புகிறது கிரகாம்பெல் தரப்பு.