Published:Updated:

ஐ.நா: இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை!

ஐ.நா வாக்கெடுப்பு
ஐ.நா வாக்கெடுப்பு

ஐக்கிய நாடுகள் சபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிரான தீமானம் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் 46-வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போர் இனப்படுகொலை மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா-வில் பிரிட்டன் கொண்டு வந்தது.

வாக்கெடுப்பு
வாக்கெடுப்பு

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், `வாக்கெடுப்பில் இந்தியா எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது’ என்றும் கூறியிருந்தது.

ஆனால், இனப்படுகொலை மற்றும் போர் குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பின்போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுப்பெற்றன. இந்நிலையில், இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. 13-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும் என்றும், மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மீதும் எந்தக் கருத்தையும் இந்தியா தெரிவிக்கவில்லை.

``இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது! ஏன் தெரியுமா?” - சுமந்த் சி ராமன் விளக்கம்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து கியூபா, பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம் உள்ளிட்ட 11 நாடுகளும். பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. வாக்கெடுப்பில் இந்தியா, நேபாளம், இந்தோனேசிய, ஜப்பான், சூடான் உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கவில்லை.

இதற்கு முன்னர் 2009, 2012, 2013, 2014 என நான்கு முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மூன்று முறை மட்டுமே வாக்களித்துள்ளது. 2014-ம் ஆண்டு வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு