Published:Updated:

``பொய் வழக்கில் சிக்கவைக்க அழுத்தம்; சிபிஐ அதிகாரி தற்கொலைக்குக் காரணம் இதுதான்!" - மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியா

``என்னைப் பொய்யான கலால் வழக்கில் சிக்கவைக்க சி.பி.ஐ அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது." - மணீஷ் சிசோடியா

``பொய் வழக்கில் சிக்கவைக்க அழுத்தம்; சிபிஐ அதிகாரி தற்கொலைக்குக் காரணம் இதுதான்!" - மணீஷ் சிசோடியா

``என்னைப் பொய்யான கலால் வழக்கில் சிக்கவைக்க சி.பி.ஐ அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது." - மணீஷ் சிசோடியா

Published:Updated:
மணீஷ் சிசோடியா

மதுவிலக்கு மாற்றம்செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நடந்திருப்பதாக டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாமீது புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த மாதம் 19-ம் தேதி மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்தினர். 'சிபிஐ அதிகாரிகளை வரவேற்கிறோம்' என ட்வீட் செய்த மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``பா.ஜ.க சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு மூலம் பழிவாங்குகிறது" எனக் கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த சோதனைக்குப் பிறகு, அது தொடர்பாக எந்த தகவலையும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

சிபிஐ
சிபிஐ

இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம், ``என்னைப் பொய் வழக்கில் சிக்கவைக்க சி.பி.ஐ அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த அதிகாரியோ மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் இரண்டு நாள்களுக்கு முன்பு தற்கொலைசெய்து கொண்டார். இது உண்மையில் துரதிஷ்டவசமானது, இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

அதிகாரிகள் ஏன் இவ்வளவு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்? 'ஆபரேஷன் லோட்டஸ்' மட்டும்தான் மத்திய அரசின் வேலையா என்று பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் என்னைக் கைதுசெய்யுங்கள், ஆனால் உங்கள் அதிகாரிகளின் குடும்பங்களை அழிக்காதீர்கள்" என தெரிவித்திருக்கிறார்.