Published:Updated:

`மதத்தின் பெயரில் நாட்டை உடைக்க முயற்சி... பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்' - மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

`இந்தியா என்பது ஒரே நாடு, அதனால் அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவை. சமத்துவத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்.' - கிரிராஜ் சிங்

`மதத்தின் பெயரில் நாட்டை உடைக்க முயற்சி... பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்' - மத்திய அமைச்சர்

`இந்தியா என்பது ஒரே நாடு, அதனால் அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவை. சமத்துவத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்.' - கிரிராஜ் சிங்

Published:Updated:
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு, எதிர்ப்பு கிளம்பிய விவகாரம், பெரும் சர்ச்சையானது. ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தொடங்கி இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் எனக் கூறி இதை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

பாஜக
பாஜக

இந்த நிலையில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி வருகிறது. மதம் மற்றும் பிராந்தியத்தின் பெயரால் நாட்டை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியா என்பது ஒரே நாடு, அதனால் அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவை. சமத்துவத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்'' எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது, பா.ஜ.க-வின் கொள்கைகளில் ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism