Published:Updated:

``பொது சிவில் சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு கௌரவம் அளிக்கும்; அதை அமல்படுத்துங்க” - அஸ்ஸாம் முதல்வர்

அஸ்ஸாம் முதல்வர் ( ட்விட்டர் )

``நாட்டில் சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்’’ என்று அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

``பொது சிவில் சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு கௌரவம் அளிக்கும்; அதை அமல்படுத்துங்க” - அஸ்ஸாம் முதல்வர்

``நாட்டில் சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்’’ என்று அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

Published:Updated:
அஸ்ஸாம் முதல்வர் ( ட்விட்டர் )

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

 மோடி
மோடி

இந்த நிலையில், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, டெல்லியில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான் சந்தித்த அனைத்து இஸ்லாமியர்களும் பொது சிவில் சட்டத்தை விரும்புகின்றனர். எந்த இஸ்லாமியப் பெண்ணும் தன் கணவருக்கு மூன்று மனைவிகள் இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. இதை எந்த இஸ்லாமியப் பெண்ணிடம் வேண்டுமென்றாலும் கேட்கலாம்.

ஓர் இஸ்லாமிய ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்வது அவருடைய பிரச்னையல்ல; மாறாக அது இஸ்லாமியத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பிரச்னை. இஸ்லாமியப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு சமூகத்தில் கௌரவம் வழங்கப்பட வேண்டுமானால், முத்தலாக் தடைக்குப் பிறகு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும். அதனால் நாங்கள் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறோம்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism