Published:Updated:

Agnipath: இந்திய பாதுகாப்புத்துறையில் புதிய ஆள்சேர்ப்புத் திட்டம்! - ராஜ்நாத் சிங் அறிவிப்பு

ராஜ்நாத் சிங்

``இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தவே `அக்னிபத்' எனும் இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய இளைஞர்கள், ஆயுதப்படையில் அக்னி வீரர்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்." - ராஜ்நாத் சிங்

Agnipath: இந்திய பாதுகாப்புத்துறையில் புதிய ஆள்சேர்ப்புத் திட்டம்! - ராஜ்நாத் சிங் அறிவிப்பு

``இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தவே `அக்னிபத்' எனும் இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய இளைஞர்கள், ஆயுதப்படையில் அக்னி வீரர்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்." - ராஜ்நாத் சிங்

Published:Updated:
ராஜ்நாத் சிங்

டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்புத்துறையில் `அக்னிபத்' எனப்படும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ``இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தவே `அக்னிபாத்' எனும் இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய இளைஞர்கள், ஆயுதப்படைகளில் அக்னி வீரராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு" என்று கூறினார்.

அக்னிபத் - திட்டம்
அக்னிபத் - திட்டம்

பாதுகாப்புத்துறையின் இந்தத் திட்டம் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படையில் மேலும் வீரர்களைச் சேர்ப்பதற்கான புதிய ஆள்சேர்ப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் `அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கான வயது வரம்பு 17-லிருந்து 21 வயது என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள், ஆறு மாதகால ஆயுதப்படை பயிற்சி உட்பட நான்கு ஆண்டுகள் இந்தத் திட்டத்தில் சேவையில் இருப்பார்கள். இந்தக் காலகட்டத்தில், அவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.30,000-லிருந்து, ரூ.40,000 வரை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

இந்த நான்கு ஆண்டுக்கால சேவை முடிந்ததும், அவர்களிலிருந்து 25 சதவிகித பேர் நேரடியாக இந்திய ஆயுதப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வழக்கமான ஆயுதப்படையில் சுமார் 15 ஆண்டுகள் பணியமர்த்தப்படுவர். மீதமுள்ள 75 சதவிகிதம் பேர் ரூ.11 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான சேவா நிதி தொகுப்புடன் வெளியேறுவார்கள்.

இந்தத் திட்டத்தில் ஆள்சேர்ப்பு, அடுத்த 90 நாள்களுக்குள் தொடங்கும் என்றும், 2023 ஜூலைக்குள் இந்தத் திட்டம் தயாராகிவிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism