Published:Updated:

``எண்ணெய் விலை உயரும்போது நல்ல ஒப்பந்தங்களைத் தேடுவது யதார்த்தம்!" - இந்தியா விளக்கம்

ஜெய்சங்கர்

`இந்தியாவின் கொள்முதல், பொருளாதாரத் தேவையின் அடிப்படையிலானது. எண்ணெய் விலை உயரும்போது வெளிச்சந்தையில் நல்ல ஒப்பந்தங்களைத் தேடுவதென்பது இயற்கையானதுதான் என நினைக்கிறேன்.' - ஜெய்சங்கர்

``எண்ணெய் விலை உயரும்போது நல்ல ஒப்பந்தங்களைத் தேடுவது யதார்த்தம்!" - இந்தியா விளக்கம்

`இந்தியாவின் கொள்முதல், பொருளாதாரத் தேவையின் அடிப்படையிலானது. எண்ணெய் விலை உயரும்போது வெளிச்சந்தையில் நல்ல ஒப்பந்தங்களைத் தேடுவதென்பது இயற்கையானதுதான் என நினைக்கிறேன்.' - ஜெய்சங்கர்

Published:Updated:
ஜெய்சங்கர்

கடந்த 37 நாள்களாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரால், கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. இதன் காரணமாக ரஷ்யா தன்னிடமிருக்கும் கச்சா எண்ணெயை வழக்கம்போல பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் போனதால், இந்தியா போன்ற நாடுகளுக்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்க முன்வந்தது. இதற்கிடையில், அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களை இறக்குமதி செய்ய பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதன் காரணமாக அமெரிக்காவின் நட்பு நாடுகள், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் தயக்கம் காட்டிவருகின்றன.

ஜோ பைடன்
ஜோ பைடன்

ஆனால், இந்தியா, ரஷ்யாவின் இந்தத் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தைப் பரிசீலிப்பதாகக் கூறியது. இந்தியாவின் இந்த முடிவுக்குப் பிறகு அமெரிக்கா மீது பல்வேறு விமர்சனங்களைக் கூறிவந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``ரஷ்யா விவகாரத்தில் முடிவெடுக்க இந்திய நடுங்குகிறது" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்விதமாக, ``கச்சா எண்ணெய் விலை உயரும்போது வெளிச்சந்தையில் நல்ல ஒப்பந்தங்களைத் தேடுவதென்பது இயற்கையானது" என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ட்ரூஸ் உடன் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஜெய்சங்கரிடம், இந்தியா-ரஷ்யா கச்சா எண்ணெய் ஒப்பந்தம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ``இந்தியாவின் கொள்முதல், பொருளாதாரத் தேவையின் அடிப்படையிலானது. எண்ணெய் விலை உயரும்போது வெளிச்சந்தையில் நல்ல ஒப்பந்தங்களைத் தேடுவதென்பது இயற்கையானதுதான் என நினைக்கிறேன். மேலும், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குபவர்களைப் பார்த்தால், அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பாவில் இருப்பதைக் காண்பீர்கள் என்று நினைக்கிறேன். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்கியவர்கள் யார் என்ற பட்டியலைப் பார்த்தால், அதில் முதல் 10 இடங்களில் இந்தியா இருக்காது" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism