Published:Updated:

`தமிழகத்தின் ரூ.21,000 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும்!' - நிதியமைச்சரிடம் ஸ்டாலின் கோரிக்கை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையான ரூ.20,860.40 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் திமுக-வின் புதிய அலுவலகமாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திறந்துவைப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லிக்குச் சென்றுள்ளார். இதன் திறப்புவிழா நாளை (ஏப்ரல் 2) நடைபெறவுள்ளது. இதற்கிடையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய போக்குவரத்துத்துறை மற்றும் அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரைச் சந்திக்க திட்டமிடப்பட்டது.

இதை `மாநில உரிமைகளுக்கான சந்திப்பு’ என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி பிரதமர் மோடியை ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து, இலங்கைத் தமிழர் விவகாரம், கச்சத்தீவு பிரச்னை, நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின்

அப்போது, தமிழக நிதி தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஸ்டாலின் அளித்தார். இந்த மனுவில், ``சரக்கு மற்றும் சேவை வரி (GST) இழப்பீட்டின் நிலுவைத் தொகையான ரூ.13,504.74 கோடி உட்பட ரூ.20,860.40 கோடி ஒன்றிய அரசிடம் உள்ளது. இந்த நிலுவைத் தொகையை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். வரும் ஜூன் மாதத்துடன் GST இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலம் முடிவுக்குவருவதால், இழப்பீடு வழங்கும் காலத்தை குறைந்தது இரண்டு ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும். மேலும் 14-வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைத்த அடிப்படை மானியம் செயல்பாட்டுக்கான எஞ்சிய மானியத்தையும் விடுவிக்க வேண்டும்" என ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism