Published:Updated:

`தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இன்னும் உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைக்கவில்லை'-மத்திய இணையமைச்சர்

நாடாளுமன்றம்

நாடாளுமன்றக் கூட்டத்தில் நீட் குறித்து தி.மு.க எம்.பி ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு, தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இன்னும் உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த தி.மு.க., நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆலோசனைக்குழுவின் பரிந்துரையின்படி, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றியது. 2021 செப்டம்பரில் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்குத் அனுப்பாமல், ஆளுநரே கடந்த மாதம் தமிழக அரசுக்குத் திருப்பியனுப்பிவிட்டார். அதையடுத்து, உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தி, சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டது.

ஆ.ராசா
ஆ.ராசா

அதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே, நீட் விலக்கு மசோதா மீதான குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகத் தமிழக அரசு காத்திருப்பில் உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், ``தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைத்ததா?" என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், ``தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைக்கவில்லை" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism