Published:Updated:

``25 ஆண்டுகளுக்குப் பிறகு எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கும் எனத் தெரியாது, ஆனால்..!" - அமித் ஷா

அமித் ஷா

`இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால், யார் ஆட்சியில் இருந்தாலும், இந்தியா என்றும் நிலைத்திருக்கும்.' - அமித் ஷா

``25 ஆண்டுகளுக்குப் பிறகு எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கும் எனத் தெரியாது, ஆனால்..!" - அமித் ஷா

`இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால், யார் ஆட்சியில் இருந்தாலும், இந்தியா என்றும் நிலைத்திருக்கும்.' - அமித் ஷா

Published:Updated:
அமித் ஷா

இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகால இடைவெளியில், சமூகம், கலாசாரம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா கண்ட சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக ``ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்'' எனும் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்தாண்டு ஆகஸ்ட் 15-ல் கொண்டாடப்படும் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக, 75 வார பயணமாகக் கடந்த ஆண்டு மார்ச் 12 முதல் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, 'அமிர்த சமகம்' எனும் பெயரில், இந்தியா முழுவதும் உள்ள கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு நேற்று நடைபெற்றது.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் பேசிய அமித் ஷா, ``அம்ரித் மஹோத்சவ் தொடர்பான 25,000 நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தியுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 7,200 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன. மத்திய அரசுடன் ஒப்பிடும்போது, ​​சில மாநிலங்கள் அம்ரித் மஹோத்சவைக் கொண்டாடுவதில் குறைந்த ஆர்வத்துடனே உள்ளன. எனவே அரசியல் வற்புறுத்தல்களையெல்லாம் பொருட்படுத்தாமல் முழுமனதுடன் அனைத்து மாநிலங்களும் இதில் பங்கேற்க வேண்டும்.

இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக யார் இருப்பார், மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால், யார் ஆட்சியில் இருந்தாலும், இந்தியா என்றும் நிலைத்திருக்கும். இதுதான் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தலைமுறையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம். அரசியல் பாகுபாடின்றி அனைவரும் இந்த பணியை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism