Published:Updated:

``தேர்தலில் தோற்பது எப்படி என்று காங்கிரஸிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்!" - அனுராக் தாக்கு

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

`தேர்தலில் தோற்பது எப்படி என்பதை காங்கிரஸிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.' - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

``தேர்தலில் தோற்பது எப்படி என்று காங்கிரஸிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்!" - அனுராக் தாக்கு

`தேர்தலில் தோற்பது எப்படி என்பதை காங்கிரஸிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.' - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

Published:Updated:
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

கடந்த மார்ச் 10-ம் தேதி ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையோடும், கோவாவில் சுயேச்சைகளின் ஆதரவோடும் ஆட்சியமைக்கவுள்ளது. பஞ்சாப்பில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி 5-ல் ஒரு மாநிலத்தில்கூட ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் படுதோல்வியடைந்துள்ளது. காங்கிரஸின் இந்த மோசமான தோல்வி குறித்து அரசியல் கட்சியினர் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். மேலும் காங்கிரஸின் இந்தத் தோல்வி காரணமாக சோனியா, பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோர் பதவி விலகுவார்கள் என்றும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரத்துக்கொண்டிருந்தன.

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில், ``ராகுல் காந்தி கட்சித் தலைவராக வர வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக, காந்தி குடும்பத்திலிருந்து யாரும் பிரதமராகவோ அல்லது அமைச்சராகவோ ஆகவில்லை" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அசோக் கெலாட்டின் கருத்துக்கு பதிலளிக்கும்விதமாக பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ``தேர்தலில் தோற்பது எப்படி என்பதை காங்கிரஸிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்" என காங்கிரஸைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

முன்னதாக நேற்று மாலை டெல்லியில், காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism