Published:Updated:

``இன்னும்கூட காந்தி குடும்பத்தின் அடிமைத்தனத்தில்தான் காங்கிரஸ் வாழ்கிறது!" - அனுராக் தாகூர் தாக்கு

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

``தங்கள் கட்சி செய்த ஊழலை மறைக்கவும், விசாரணையை நிறுத்தவும்தான் காங்கிரஸ் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்." - அனுராக் தாகூர்

``இன்னும்கூட காந்தி குடும்பத்தின் அடிமைத்தனத்தில்தான் காங்கிரஸ் வாழ்கிறது!" - அனுராக் தாகூர் தாக்கு

``தங்கள் கட்சி செய்த ஊழலை மறைக்கவும், விசாரணையை நிறுத்தவும்தான் காங்கிரஸ் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்." - அனுராக் தாகூர்

Published:Updated:
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

நேஷனல் ஹெரால்டு ஊழல் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம், அண்மையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது. இதற்கு, காங்கிரஸ் தரப்பிலிருந்து பல்வேறு கண்டனங்களும்... போராட்டங்களும் அரங்கேறின. காங்கிரஸாரின் இத்தகைய நடவடிக்கைகளை பா.ஜ.க தலைவர்களும் விமர்சித்துவந்தனர்.

ராகுல் காந்தி, சோனியா காந்தி
ராகுல் காந்தி, சோனியா காந்தி

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மதியம் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதற்கும் காங்கிரஸ் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், காங்கிரஸின் எதிர்ப்புகளை தற்போது கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அனுராக் தாகூர், ``ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்தை எப்படி அபகரிப்பது என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

இதை செய்தது வேறு யாருமல்ல, தற்போது அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வரும் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்தான். ஜாமீனில் வெளியே இருந்தாலும் விசாரணையிலிருந்து தப்பிப்பது ஏன்? தங்கள் கட்சி செய்த ஊழலை மறைக்கவும், விசாரணையை நிறுத்தவும்தான் காங்கிரஸ் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டின் சட்டம் பொருந்தாதா... நாட்டின் சட்டத்துக்கும் மேலானதா காந்தி குடும்பம்? ஊழல் ஏன் நடந்தது என்பதை விசாரணை நிறுவனத்திடம் சொல்ல வேண்டாமா? நிரபராதி என்றால் அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்?" என அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

மேலும் தொடர்ந்து பேசிய அனுராக் தாகூர், ``காங்கிரஸ் தலைவர்கள் பொதுமக்களின் குரலை எழுப்பவிடாமல், காந்தி குடும்பத்துக்குள்ளே அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும்கூட காங்கிரஸ் கட்சி இன்னும் ஒரு குடும்பத்தின் அடிமைத்தனத்தில்தான் வாழ்கிறது" என்றார்.