Published:Updated:

கனிமொழிக்கு துணை சபாநாயகர் பதவியா?

கனிமொழி - அர்ஜுன் ராம் மெஹ்வால்
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி - அர்ஜுன் ராம் மெஹ்வால்

மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால்

கனிமொழிக்கு துணை சபாநாயகர் பதவியா?

மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால்

Published:Updated:
கனிமொழி - அர்ஜுன் ராம் மெஹ்வால்
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி - அர்ஜுன் ராம் மெஹ்வால்
‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்’ என்று அமளியில் ஈடுபட்ட ஏழு காங்கிரஸ் எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை தற்போது திரும்பப்பெறப்பட்டிருந்தாலும், அதன் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில், தனிப்பட்ட பயணமாக தமிழகத்துக்கு வந்திருந்தார், நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், ராஜஸ்தானின் முக்கியமான பட்டியலின அரசியல் செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். சென்னையில் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கோஷமிட்டு போராட்டம் நடத்துவது வழக்கமான விஷயம்தானே... அதற்காக காங்கிரஸின் ஏழு எம்.பி-க்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி அல்லவா?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சபாநாயகரின் இருக்கையில் இருந்த பேப்பரை அவர்கள் கிழித்து எறிந்தது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிகழ்வா? நாடாளுமன்றத்தில் அநாகரிகமாகவும் அவைக்கு குந்தகம் விளைவிக்கும்வகையிலும் நடந்துகொள்ளும் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யலாம் என நாடாளுமன்ற சட்டப்பிரிவு 374(1)(2) கூறுகிறது. இந்தச் சட்டப்பிரிவைக் கொண்டுவந்ததே காங்கிரஸ் அரசுதான். இப்போது அவர்களே இதை எதிர்க்கின்றனர். மீராகுமார் சபாநாயகராக இருந்தபோது, 40 பேரை அவர் இடைநீக்கம் செய்தார். இது ஒன்றும் புதிய நடைமுறையல்ல. சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையைத் தான் நாங்கள் மேற்கொள்கிறோம்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நாடாளுமன்றத்தில் ஏன் இன்னும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க வில்லை... கனிமொழியை துணை சபாநாயகராக நியமிக்க முன்வந்தும் தி.மு.க அதை ஏற்கவில்லை என்ற செய்தி உண்மையா?

‘‘கனிமொழிக்கு துணை சபாநாயகர் பதவியா?! அப்படி எதுவும் பேசப்பட வில்லையே. துணை சபாநாயகர் நியமன விவகாரம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவெடுக்கப்படும்.”

கனிமொழி
கனிமொழி

“தமிழகத்தில் பட்டியலின அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த உங்கள் பார்வை என்ன?”

“இதுபற்றிய விரிவான ஓர் அலசல் தேவைப் படுகிறது. இது ஒரு மணி நேரத்தில் பேசி விடக்கூடிய விஷயமல்ல. பட்டியலின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை நாங்கள் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம். காஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘சிதம்பரத்தைச் சேர்ந்த பட்டியலின இந்துத் துறவி சுவாமி சகஜானந்தரின் தபால்தலையை வெளியிட வேண்டும்’ என்று எங்கள் கட்சிப் பிரமுகர் தடா பெரியசாமி என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பட்டியலினத்தில் பிறந்து, அந்தச் சமூக மக்களின் கல்வி, சமூக, பொருளா தார வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவர் சுவாமி சகஜானந்தர். அவரைப்போன்ற துறவிகளை கெளரவிப்பது பெருமைக்குரிய விஷயம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“கடவுள் மறுப்புக்கொள்கை, சுயமரியாதை இயக்கங்கள் ஆழமாகக் காலூன்றியுள்ள தமிழகத்தில், பா.ஜ.க-வால் மக்களை நெருங்க முடியும் என்று கருதுகிறீர்களா?’’

‘‘நாட்டின் வளர்ச்சியே எங்களுக்கு முக்கியம். தமிழகத்தில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் முத்ரா திட்டத்தின்கீழ் குறு, சிறு வியாபாரிகள் பலர் வங்கிகளில் கடன் பெற்று தங்கள் வாழ்வை வளமாக்கியுள்ளனர். இப்படி ஏராளமான திட்டங்கள் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டே செயல்படுத்தப் படுகின்றன. இவை, மக்களிடம் எங்களை நெருங்கச் செய்யும்.”

அர்ஜுன் ராம் மெஹ்வால்
அர்ஜுன் ராம் மெஹ்வால்

‘‘சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுத்துவந்தாலும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பது ஏன்?”

அச்சம்
தேவையற்றது

‘‘சி.ஏ.ஏ குறித்த அச்சம் தேவையற்றது. எதிர்க்கட்சிகள் மக்களைக் குழப்பிக்கொண்டிருக் கின்றன. இந்திய குடியுரிமை பெற்ற எவரையும் இந்த நாட்டிலிருந்து வெளியேற்றி விட முடியாது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்துவரும் மைனாரிட்டி சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்குவது குறித்துதான் சி.ஏ.ஏ கூறுகிறது. இதற்கும் இங்கு உள்ள இந்தியப் பிரஜைகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. சி.ஏ.ஏ சட்டத்தால் யாரும் இங்கேயிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள்.”

“மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறதே... அமைச்சரவை மாற்றத்தில் தமிழக எம்.பி-க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?”

‘‘நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும்!’’

- அர்த்தமுள்ள புன்னகையுடன் விடை கொடுக்கிறார் அர்ஜுன் ராம் மெஹ்வால்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism