Published:Updated:

``பாஜக-வில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை..!" - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

ஜோதிராதித்ய சிந்தியா

``பா.ஜ.க-வில், தொண்டர்களின் உழைப்பைப் பொறுத்தே அவர்களுக்குரிய வெகுமதி அளிக்கப்படுகிறது என்பதையே பிரதமர் மோடி நம்புகிறார்" என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியிருக்கிறார்.

``பாஜக-வில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை..!" - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

``பா.ஜ.க-வில், தொண்டர்களின் உழைப்பைப் பொறுத்தே அவர்களுக்குரிய வெகுமதி அளிக்கப்படுகிறது என்பதையே பிரதமர் மோடி நம்புகிறார்" என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியிருக்கிறார்.

Published:Updated:
ஜோதிராதித்ய சிந்தியா

``பா.ஜ.க-வில், தொண்டர்களின் உழைப்பைப் பொறுத்தே அவர்களுக்குரிய வெகுமதி அளிக்கப்படுகிறது என்பதையே பிரதமர் மோடி நம்புகிறார்’’ என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருக்கிறார்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியாவின் மகனும், மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா, ``பா.ஜ.க-வில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை’’ எனக் கூறியிருக்கிறார். ஜோதிராதித்ய சிந்தியா, ஷியாம்லா ஹில்ஸ் பகுதியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, வாரிசு அரசியலில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கேள்வியெழுப்பினர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதற்கு பதிலளித்த ஜோதிராதித்ய சிந்தியா, ``பா.ஜ.க-வில் வாரிசு அரசியல் இல்லை. பிரதமரின் சிந்தனை, சித்தாந்தத்தின்படி கட்சிக்குள் தொண்டர்களுக்கு, குடும்பப் பின்னணி அடிப்படையில் அல்லாமல், உழைப்பைப் பொறுத்தே அவர்களுக்குரிய வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்று மோடி கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகத்தின் ஓர் ஆதாரமாக மோடி இருக்கிறார். இதே உத்வேகத்துடன் மக்களின் நலனுக்காக அனைவரும் உழைக்க வேண்டும்" என்று கூறினார்.

இன்று மத்திய அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா, 2020-ல் காங்கிரஸிலிருந்து பல எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வில் இணைந்தார். ஜோதிராதித்ய சிந்தியாவின் இத்தகைய செயலால் மத்தியப் பிரதேசத்தில் அப்போதைய கமல்நாத் ஆட்சி சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism