Published:Updated:

``பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சரவையில் கடைசி இடம்... இதுதான் திராவிட மாடலா?!" - எல்.முருகன் காட்டம்

எல்.முருகன்

`தி.மு.க-வினர் புதிதாக திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வருகின்றனர். மக்களுக்கு இது புரியவில்லை. இது ஆன்மிக பூமி. இங்கு திராவிட மாடல் எடுபடாது.' - எல்.முருகன்

``பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சரவையில் கடைசி இடம்... இதுதான் திராவிட மாடலா?!" - எல்.முருகன் காட்டம்

`தி.மு.க-வினர் புதிதாக திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வருகின்றனர். மக்களுக்கு இது புரியவில்லை. இது ஆன்மிக பூமி. இங்கு திராவிட மாடல் எடுபடாது.' - எல்.முருகன்

Published:Updated:
எல்.முருகன்

"தி.மு.க-வுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை. மு.க.ஸ்டாலின் சமூக நீதி பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

மதுரை மாவட்டம், மேலூரில் பா.ஜ.க அரசின் 8 ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ``2014-க்கு முன்பு நம் நாடு எப்படியிருந்தது. மோடி பிரதமரான பின் எப்படியிருக்கிறது?

எல்.முருகன்
எல்.முருகன்

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அனைத்திலும் ஊழலே அதிகமாக இருந்தது.

பிரதமர் மோடியால் நாடு முன்னேற்றப்பாதையில் செல்ல ஆரம்பித்தது. வங்கிக்கே செல்லாத அனைவருக்கும் ஜன் தன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. அரசு மானியங்கள் அனைத்தும் நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்க்க காரணம் பிரதமர் மோடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாடு தூய்மையாக இருக்க பொதுமக்களுக்கு கழிப்பறை வசதிகள், கிராமங்களில் வீடுகள், இலவச எரிவாயு இணைப்புகள் என பல திட்டங்களை கொண்டுவந்தார். விவசாயிகளுக்கு வருடம்தோறும் ஆறாயிரம் கோடி ரூபாய் நிதி அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் 46 லட்சம் விவசாயிகள் பயனடைகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் திணறியபோது, இந்தியா அதனை நல்ல முறையில் கையாண்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் முன்னோடியாக திகழ்கிறது.

வந்திருந்த தொண்டர்கள்
வந்திருந்த தொண்டர்கள்

சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம், மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம், தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரைக்கு எய்ம்ஸ் என மோடி கொண்டுவந்தார்.

தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றன. ஆனால், வெற்றி பெற்ற பின்பு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க-வினர் புதிதாக திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வருகின்றனர். மக்களுக்கு இது புரியவில்லை. இது ஆன்மிக பூமி. இங்கு திராவிட மாடல் எடுபடாது.

தி.மு.க-வுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை. மு.க.ஸ்டாலின் சமூக நீதி பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள துறைகளில் அமைச்சர்களாக பட்டியிலினத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கர்நாடகாவில் முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பட்டியலினத்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசம் பா.ஜ.க ஆட்சியில் பட்டியிலினத்தவர் நிதி அமைச்சர். அது மட்டுமல்ல, ஆந்திராவில்கூட பட்டியிலினத்தவருக்கு உள்துறை கொடுக்கப்பட்டுள்ளது.

எல்.முருகன்
எல்.முருகன்

ஆனால், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு கடைசியில் இடம். 35 பேர் அமைச்சர்கள் என்றால் அதில் 33,34,35 -வது இடத்தில் உள்ளனர். இதுதான் தி.மு.க ஆட்சியின் ஸ்டேட்டஸ். அதிலும் அவர்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை, சுற்றுலாத்துறை, வேலைவாய்ப்புத் துறை போன்ற துறைகளே வழங்கப்பட்டுள்ளன. ஏன் இவர்களுக்கு உள்துறை, வருவாய்த்துறை கொடுக்கக்கூடாதா? அப்படியென்றால் உங்கள் கட்சியிலுள்ள பட்டியலியினத்தவர்கள்மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை. இதுதான் உங்கள் திராவிட மாடலின் லட்சணம். உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் மோடிதான். பா.ஜ.க ஆட்சியில்தான் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன" என்று பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism