Published:Updated:

``மதச்சார்பின்மை என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் பதற்றமான சூழலை உருவாக்குகின்றன!" - மத்தியமைச்சர்

மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

``எதிர்க்கட்சிகள், வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு, சிறுபான்மையினருக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற பிம்பத்தை உலகம் முழுவதும் பரப்ப முயல்கின்றன." - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

``மதச்சார்பின்மை என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் பதற்றமான சூழலை உருவாக்குகின்றன!" - மத்தியமைச்சர்

``எதிர்க்கட்சிகள், வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு, சிறுபான்மையினருக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற பிம்பத்தை உலகம் முழுவதும் பரப்ப முயல்கின்றன." - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

Published:Updated:
மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு, உச்ச நீதிமன்றம் தடைவிதித்த போதிலும், அந்தப் பகுதியில் நேற்று புல்டோசர்களைக்கொண்டு சில ஆக்கிரமிப்புகள் தகர்க்கப்பட்டன. அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி, ஒவைசி, ராகவ் சாதா உட்படப் பலர் பா.ஜ.க-வை விமர்சித்தனர். அதனைத்தொடர்ந்து, ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கான தடை இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, பா.ஜ.க மீதான விமர்சனங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

இது தொடர்பாக டெல்லியில் இன்று பேசிய முக்தார் அப்பாஸ் நக்வி, ``ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி அல்லது பிற அரசியல் கட்சியினராக இருந்தாலும் சரி, இந்த புல்டோசர்கலள் வெறும் ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்றுவதற்கு பயன்படுத்தப்படவில்லை, கிளர்ச்சியையும், கிளர்ச்சியாளர்களையும் அடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். இன்னும் சிலர் மதச்சார்பின்மை, கம்யூனிசம் என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்தி, அச்ச சூழலை உருவாக்கப் பழகிவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெல்லி கலவரம்-ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
டெல்லி கலவரம்-ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையில் வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு, சிறுபான்மையினருக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற பிம்பத்தை உலகம் முழுவதும் பரப்ப முயல்கின்றன. இது மிகத் தெளிவான திட்டமிடப்பட்ட செயலாகும்" என எதிர்க்கட்சிகளை மொத்தமாகச் சாடியிருந்தார்.

ஜஹாங்கிர்புரி சம்பவம் குறித்து ராகுல் காந்தி, ``இது ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து அரசால் நடத்தப்படும் தாக்குதல். மேலும், இது இந்தியாவின் அரசியலமைப்பு விழுமியங்களை தகர்க்கும் செயலாகும்" என பா.ஜ.க-வை விமர்சித்து நேற்று ட்வீட் செய்திருந்தார் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism