Published:Updated:

சத்ரபதி சிவாஜி படத்துடன் 200 ரூபாய் நோட்டு... மத்திய அமைச்சர் நாராயண் ராணே மகன் சர்ச்சை ட்வீட்

சிவாஜியின் படத்துடன் ரூபாய் நோட்டு

சத்ரபதி சிவாஜி மகாராஜா படத்துடன் 200 ரூபாய் நோட்டு படத்தை மத்திய அமைச்சரின் மகன் வெளியிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சத்ரபதி சிவாஜி படத்துடன் 200 ரூபாய் நோட்டு... மத்திய அமைச்சர் நாராயண் ராணே மகன் சர்ச்சை ட்வீட்

சத்ரபதி சிவாஜி மகாராஜா படத்துடன் 200 ரூபாய் நோட்டு படத்தை மத்திய அமைச்சரின் மகன் வெளியிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
சிவாஜியின் படத்துடன் ரூபாய் நோட்டு

முதலில் ரூபாய் நோட்டில் நேதாஜி படத்தை அச்சிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இது தவிர `கடவுள்கள் லட்சுமி, கணேஷ் படங்களையும் ரூபாய் நோட்டில் அச்சிட்டால் நாடு மேலும் வளர்ச்சியடையும்’ என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்தார். கடவுள்களின் படத்தை ரூபாய் நோட்டில் அச்சிடுவதன் மூலம் கடவுள்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். கெஜ்ரிவால் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்காக இது போன்று சொல்வதாகவும், காந்தியை ஓரங்கட்டப் பார்ப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியிருந்தது.

நிதேஷ் ராணே
நிதேஷ் ராணே

ரூபாய் நோட்டில் வேறு சில தலைவர்களின் படங்களையும் சேர்த்து அச்சிட வேண்டும் என்ற கோரிக்கை மேலும் பல இடங்களிலிருந்து வந்திருக்கிறது. மத்திய அமைச்சர் நாராயண் ராணேயின் மகன் நிதேஷ் ராணே ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி படம் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். தனது கோரிக்கையைத் தெரிவிக்கும்விதமாக சத்ரபதி சிவாஜி படம் இடம்பெற்ற 200 ரூபாய் நோட்டு படத்தைத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதோடு இதுதான் பொருத்தமானது என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். நிதேஷ் ராணேயின் இந்தச் செயல் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சட்டவிரோதமாக சிவாஜி படத்தை ரூபாய் நோட்டில் பதிவிட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. நிதேஷ் ராணேயின் இதற்கு முந்தையப் பல செயல்கள் சர்ச்சைக்குரியவையாகவே இருந்துவந்துள்ளன.

இதற்கிடையே கடவுள்கள் லட்சுமி, கணேஷ் படங்கள் இடம்பெறுவதாக இருந்தால் அல்லா, ஏசு, புத்தர், குருநானக், மகாவீரர் படங்களும் ரூபாய் நோட்டில் இடம்பெற வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் சல்மான் அனீஸ் தன் ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் அல்லாவின் படத்தைச் சேர்ப்பது குறித்தும் பரிசீலியுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாராயண் ராணே ஆரம்பத்தில் சிவசேனாவில்தான் இருந்தார். அதிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்குச் சென்று, இப்போது பாஜக-வில் சேர்ந்து மத்திய அமைச்சராகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.