Published:Updated:

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? - மத்தியமைச்சர் பதில்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, 21 தனியார் துறை வங்கிகள் பகிர்ந்துள்ள தகவல்களின் மூலம், உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய 1,319 மாணவர்களின் கல்விக் கடனாக 121.61 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு கூறியது

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? - மத்தியமைச்சர் பதில்

டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, 21 தனியார் துறை வங்கிகள் பகிர்ந்துள்ள தகவல்களின் மூலம், உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய 1,319 மாணவர்களின் கல்விக் கடனாக 121.61 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு கூறியது

Published:Updated:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

உக்ரைனில் ரஷ்யப் படையினர் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகவே, உக்ரைனில் படித்துவந்த இந்திய மாணவர்கள் உட்பட இந்திய மக்களை மீட்கும் பணியை `ஆப்ரேஷன் கங்கா' திட்டம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம், பிப்ரவரி 1 முதல் சுமார் 22,500 இந்திய மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும், அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ கவனிப்பு ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியுள்ளதாகக் கூறியிருந்தது. மேலும், உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட விமானங்கள் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

நாடாளுமன்ற மக்களவை
நாடாளுமன்ற மக்களவை

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, 21 தனியார் துறை வங்கிகள் பகிர்ந்துள்ள தகவல்களின் மூலம், உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய 1,319 மாணவர்களின் கல்விக் கடனாக 121.61 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு கூறியது.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.ரவ்னீத் சிங் பிட்டு, 1,319 மாணவர்களின் ரூ.121.61 கோடி கல்விக்கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``தற்போதைய மோதலின் தாக்கங்களை மதிப்பீடு செய்வதற்கும், மாணவர்களின் நிலுவையில் உள்ள கல்விக் கடன்களில் பங்குதாரர்களின் ஆலோசனைகளைத் தொடங்குவதற்கும் இந்திய வங்கிகள் சங்கத்தைக் கேட்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism