Published:Updated:

அக்‌ஷய் குமார் நடித்த சாலைப் பாதுகாப்பு விளம்பரம்; பகிர்ந்த நிதின் கட்கரி - கிளம்பும் சர்ச்சை!

நிதின் கட்கரி

``6 ஏர்பேக்குகள் கொண்ட வாகனத்தில் பயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக்குங்கள்." - நிதின் கட்கரி

அக்‌ஷய் குமார் நடித்த சாலைப் பாதுகாப்பு விளம்பரம்; பகிர்ந்த நிதின் கட்கரி - கிளம்பும் சர்ச்சை!

``6 ஏர்பேக்குகள் கொண்ட வாகனத்தில் பயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக்குங்கள்." - நிதின் கட்கரி

Published:Updated:
நிதின் கட்கரி

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்த சாலைப் பாதுகாப்பு குறித்த விளம்பர வீடியோவையும், அதைத் தொடர்ந்து "ஆறு ஏர்பேக்குகள் கொண்ட வாகனத்தில் பயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக்குங்கள்" எனவும் பதிவிட்டிருக்கிறார்.

அந்த கார் விளம்பரத்தில், திருமணத்துக்குப் பிறகு தன் மகளைக் கணவன் வீட்டுக்கு அனுப்பும் தந்தை அழுதுகொண்டிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அக்‌ஷய் குமார், மணமகனையும் மணமகளையும் இரண்டு ஏர்பேக்குகளுடைய காரில் அனுப்பும் தந்தையின் அருகில் நின்று கேலி செய்வதைப்போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஆறு ஏர் பேக்குகள் இருக்கும் காரில் அந்த புதுமணத் தம்பதி அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடு தழுவிய தேசிய சாலைப் பாதுகாப்பு பிரசாரத்துக்கு அக்‌ஷய் குமாரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, 'சாலைப் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் நடிகர் அக்‌ஷய் குமாரின் முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைத்து , மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று பதிவிட்டிருந்தார். நிதின் கட்கரியின் ட்விட்டர் பதிவுக்குப் பிறகு, பலர் அந்த விளம்பரம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நிதின் கட்கரி
நிதின் கட்கரி

இது தொடர்பாக சிவசேனா ராஜ்ய சபா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, நிதின் கட்கரியின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, "இந்த விளம்பரம், கார் பாதுகாப்புக்காகவா அல்லது வரதட்சணையை ஊக்குவிக்க அரசாங்கம் பணத்தைச் செலவிடுகிறதா... இது மிகவும் சிக்கலான விளம்பரம். இது போன்ற படைப்புகளை யாரும் கடந்து செல்ல முடியாது. காரின் பாதுகாப்பு அம்சத்தை விளம்பரப்படுத்த அரசு பணம் செலவழிக்கிறதா அல்லது இந்த விளம்பரத்தின் மூலம் வரதட்சணை என்ற தீய குற்றச் செயலை விளம்பரப்படுத்துகிறதா?" என்று பதிவிட்டிருக்கிறார்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலேவும் இந்த விளம்பரத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக, ``இந்திய அரசு வரதட்சணையை அதிகாரபூர்வமாக ஊக்குவிப்பதைப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.