Published:Updated:

``இந்த மருத்துவமனை இந்துக்களுக்கு மட்டுமா?” - ரத்தன் டாடா கேள்வியை நினைவுகூர்ந்த நிதின் கட்கரி

ரத்தன் டாடா

``நம் நாட்டில், கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் தேவையான வசதிகள் இல்லை. நகர்ப்புறத்தில் நல்ல வசதிகள் இருந்தாலும், கிராமப்புறங்களில் அவ்வளவாக வசதிகள் இல்லை."- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

``இந்த மருத்துவமனை இந்துக்களுக்கு மட்டுமா?” - ரத்தன் டாடா கேள்வியை நினைவுகூர்ந்த நிதின் கட்கரி

``நம் நாட்டில், கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் தேவையான வசதிகள் இல்லை. நகர்ப்புறத்தில் நல்ல வசதிகள் இருந்தாலும், கிராமப்புறங்களில் அவ்வளவாக வசதிகள் இல்லை."- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

Published:Updated:
ரத்தன் டாடா

புனேவில் மருத்துவமனை திறப்புவிழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, `ஆர்.எஸ்.எஸ்.மருத்துவமனை இந்துக்களுக்கு மட்டுமா?' என ரத்தன் டாடா ஒருமுறை தன்னிடம் கேள்வி எழுப்பியதாக அதனை நினைவுகூர்ந்தார்.

அது குறித்துப் பேசிய நிதின் கட்கரி, ``மகாராஷ்டிராவில் நான் அமைச்சராக இருந்தபோது, இதேபோல் மருத்துவமனை திறப்புவிழா ஒன்றுக்கு தொழிலதிபர் ரத்தன் டாடாவை வரவழைக்க உதவுமாறு ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவர் என்னிடம் கேட்டார். அப்போது ரத்தன் டாடாவை நான் சந்தித்தபோது, `இந்த மருத்துவமனை இந்துக்களுக்கு மட்டுமா?’ என்று அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், `ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?’ என்று அவரிடமே கேட்டேன். `இல்லை, இது ஆர்.எஸ்.எஸ் மருத்துவமனை ஆச்சே’ என ரத்தன் டாடா கூறினார். பின்னர், `ஆர்.எஸ்.எஸ்-ல் அப்படி எதுவும் இல்லை. இது எல்லா சமூகத்துக்கும் உரியதே’ என்று நான் கூறினேன்" என நினைவுகூர்ந்தார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மேலும் தொடர்ந்து பேசிய நிதின் கட்கரி, ``நம் நாட்டில், கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் தேவையான வசதிகள் இல்லை. அதன் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இன்னும் நிறைய செய்ய வேண்டும். நகர்ப்புறத்தில் நல்ல வசதிகள் இருந்தாலும், கிராமப்புறங்களில் அவ்வளவாக வசதிகள் இல்லை. குறிப்பாக கல்வி. ஆனால், அதற்கான செயல்பாடுகள் மேம்பட்டுவருகின்றன" எனக் கூறினார். அதுமட்டுமல்லாமல் தான், 10% அரசியலும், 90% சமூகப் பணியும் செய்வதாக நிதின் கட்கரி கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism