Published:Updated:

``மோடியைத் தவிர வேறு யாரையும் மக்கள் பிரதமராக ஏற்கமாட்டார்கள்!" - மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்

உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ( ட்விட்டர் )

``முதன்முறையாக ஏழைகளைக் காக்க ஒருவர் கிடைத்திருப்பதால், பிரதமர் பதவி மோடிக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது." - மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்

``மோடியைத் தவிர வேறு யாரையும் மக்கள் பிரதமராக ஏற்கமாட்டார்கள்!" - மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்

``முதன்முறையாக ஏழைகளைக் காக்க ஒருவர் கிடைத்திருப்பதால், பிரதமர் பதவி மோடிக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது." - மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்

Published:Updated:
உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ( ட்விட்டர் )

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணியில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறி தன்னுடைய முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமாசெய்த கையோடு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் அங்கம்வகிக்கும் மகாபந்தன் கூட்டணியில் தன்னுடைய கட்சியை இணைத்துக்கொண்டார். பின்னர் மகாபந்தன் கூட்டணியின் தலைவராக அறிவிக்கப்பட்ட நிதிஷ் குமார், ராஜினாமாசெய்த சில மணிநேரங்களிலேயே மீண்டும் ஆட்சியமைக்க உரிமைக்கோரினார்.

பீகார் முதல்வர் நிதிஷ் பகுமார்
பீகார் முதல்வர் நிதிஷ் பகுமார்

இதற்கிடையில், 2024 லோக் சபா தேர்தலில் நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்குப் போட்டியிடலாம் என்றும் செய்திகள் பரவின. இத்தகைய செய்திகள் வெளியானதையடுத்து, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் இதற்கு பதிலளிக்கும் விதமாக, `மோடியைத் தவிர வேறு யாரையும் மக்கள் பிரதமராக ஏற்க மாட்டார்கள்' எனக்கூறியிருக்கிறார்.

நித்யானந்த் ராய்
நித்யானந்த் ராய்

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடத்தில் பேசிய நித்யானந்த் ராய், ``பீகார் மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள அனைத்து மக்களுமே, நரேந்திர மோடியை வாழ்நாள் முழுவதும் பிரதமராக இருக்க ஆசீர்வதித்திருக்கின்றனர். மோடி இருக்கும்வரை வேறு யாரையும் மக்கள் பிரதமராக ஏற்கமாட்டார்கள். மேலும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் ஒருபோதும் நாட்டின் பிரதமராக முடியாது. முதன்முறையாக ஏழைகளைக் காக்க ஒருவர் கிடைத்திருப்பதால், பிரதமர் பதவி மோடிக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது" எனக்கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொடர்ந்து நிதிஷ் குமாரின் புதிய கூட்டணி குறித்துப் பேசிய நித்யானந்த் ராய், ``தேஜஸ்வி யாதவுடன் செல்வது, பீகாரின் மக்கள், அவர்களின் ஆணை மற்றும் லோஹியா-ஜேபி-ஜார்ஜ் சித்தாந்தங்களுக்குச் செய்யும் துரோகம். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் இணைந்திருப்பதென்பது, ஆட்சியில் இருப்பதற்காகவே நிதிஷ் குமார் அனைத்தையும் செய்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறது" என்று தெரிவித்தார்.