Published:Updated:

``ராகுலும் போலி, அவருடைய சித்தாந்தமும் போலி..!" - மத்திய அமைச்சர் தாக்கு

ராகுல் காந்தி - அமைச்சர் பிரகலாத் ஜோஷி ( ட்விட்டர் )

``ராகுல் காந்தி, மகாத்மா காந்தியின் வழித்தோன்றல் அல்ல. அவர் போலி காந்தி." - அமைச்சர் பிரகலாத் ஜோஷி

``ராகுலும் போலி, அவருடைய சித்தாந்தமும் போலி..!" - மத்திய அமைச்சர் தாக்கு

``ராகுல் காந்தி, மகாத்மா காந்தியின் வழித்தோன்றல் அல்ல. அவர் போலி காந்தி." - அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Published:Updated:
ராகுல் காந்தி - அமைச்சர் பிரகலாத் ஜோஷி ( ட்விட்டர் )

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகம் உட்பட பல்வேறு இடங்களில் காங்கிரஸார் போராட்டம் நடத்திய வண்ணம் இருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவோரை போலீஸ் கைதுசெய்தும்வருகிறது. இருப்பினும் பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிவருகின்றனர்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ``அவர்கள் ஏன் காந்தி குடும்பத்தைத் தாக்குகிறார்கள்... நாங்கள் ஒரு சித்தாந்தத்துக்காகப் போராடுவதால் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

எங்களைப் போன்று கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காகவும், மத நல்லிணக்கத்துக்காகவும் பல ஆண்டுகளாக நாங்கள் போராடுகிறோம். இந்துக்கள்-முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போதும், ​​பட்டியலினத்தவர்கள் கொல்லப்படும்போதும், ​​ஒரு பெண் தாக்கப்படும்போதும் எங்களுக்கு வலிக்கிறது. அதனால், நாங்கள் போராடுகிறோம். இதுவொன்றும் சாதாரண ஒற்றைக் குடும்பமல்ல, இது ஒரு சித்தாந்தம். இந்தியாவிலுள்ள அனைத்துச் சுதந்திர அமைப்புகளும் இன்று பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனவே ஆர்.எஸ்.எஸ்-ஸின் யோசனையை எதிர்ப்பதே என்னுடைய வேலை, அதைத் தொடர்ந்து செய்யப்போகிறேன்" என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
ட்விட்டர்

இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேச்சை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடுமையாக விமர்சித்திருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, ``ராகுல் காந்தி, மகாத்மா காந்தியின் வழித்தோன்றல் அல்ல. அவர் போலி காந்தி. மேலும் அவர் கூறுவது ஒரு போலி சித்தாந்தம்" என்றார்.

இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.