Published:Updated:

``பல்கலைக்கழகங்கள் கருத்தியல் மோதலுக்கான இடமாக மாறக் கூடாது'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா

அமித் ஷா

``இந்தியா உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

``பல்கலைக்கழகங்கள் கருத்தியல் மோதலுக்கான இடமாக மாறக் கூடாது'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா

``இந்தியா உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அமித் ஷா

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கின் தொடக்கவிழாவில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அமித் ஷா , ``பல்கலைக்கழகங்கள் கருத்து பரிமாற்றத்துக்கான களமாக மாற வேண்டுமே தவிர, கருத்தியல் மோதலுக்கான இடமாக மாறக் கூடாது. கருத்துகள், விவாதங்கள் மூலம் ஒரு சித்தாந்தம் முன்னேறுகிறது. இளைஞர்கள் தாங்கள் நாட்டுக்குச் செய்யவேண்டிய கடமைகளைப் புரிந்து செயல்பட வேண்டும். இந்தியா அமைதியை வணங்குகிறது. அமைதியை விரும்புகிறது.

அமித் ஷா
அமித் ஷா

இந்தியா உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கென ஒரு பாதுகாப்புக் கொள்கை இருந்ததில்லை. அப்படியே இருந்திருந்தாலும் அது வெளியுறவுக் கொள்கையின் நிழலாகவே இருந்திருக்கும். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா பல்வேறு விஷயங்களைச் சாதித்தது. புதிய கல்விக் கொள்கை பாராட்டத்தக்கது. மேலும் அனைவராலும் வரவேற்கப்பட்ட அந்தக் கொள்கையை யாரும் எதிர்க்கவில்லை'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism