Published:Updated:

உ.பி இடைத்தேர்தல்: ``அக்னிபத் திட்டத்துக்கான மக்களின் ஆதரவே, பாஜக-வின் வெற்றி!'' - பீகார் அமைச்சர்

பீகார் மாநில அமைச்சர் பிரமோத் குமார்

``12-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுபோன்ற அக்னி வீரர்கள் வேலைசெய்கின்றனர்" - பீகார் மாநில அமைச்சர் பிரமோத் குமார்

உ.பி இடைத்தேர்தல்: ``அக்னிபத் திட்டத்துக்கான மக்களின் ஆதரவே, பாஜக-வின் வெற்றி!'' - பீகார் அமைச்சர்

``12-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுபோன்ற அக்னி வீரர்கள் வேலைசெய்கின்றனர்" - பீகார் மாநில அமைச்சர் பிரமோத் குமார்

Published:Updated:
பீகார் மாநில அமைச்சர் பிரமோத் குமார்

உத்தரப்பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், இரண்டு தொகுதிகளிலும் ஆளும் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், மக்கள் அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவளித்திருப்பதால்தான் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது என பீகார் மாநில அமைச்சர் பிரமோத் குமார் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மார்ச்சில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், எம்.பி-க்களாக இருந்த அகிலேஷ் யாதவ், அசம்கான் இருவரும் எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அதனால் அந்த இரு தொகுதிகளும் காலியாகின. அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு காலியாக இருந்த ராம்பூர், அசம்கர் மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இரண்டு தொகுதிகளிலுமே பா.ஜ.க-வே வெற்றிபெற்றது. பா.ஜ.க-வின் இந்த வெற்றியைப் பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டியிருந்தார்.

அக்னிபத் - திட்டம்
அக்னிபத் - திட்டம்

இந்த நிலையில், பிகாரில் பா.ஜ.க-வின் இத்தகைய வெற்றி குறித்துப் பேசிய பீகார் மாநில சட்ட அமைச்சர் பிரமோத் குமார், ``உத்தரப்பிரதேசத்தில் எங்கள் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதன்மூலம் அசம்கர், ராம்பூர் மக்கள் அக்னிபத் திட்டத்துக்கு அதிக ஆதரவாக இருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இங்கு நடந்த போராட்டங்கள் அனைத்தும் சதியின் ஒரு பகுதியே தவிர பாதிக்கப்பட்ட இளைஞர்களின் தன்னிச்சையான எதிர்ப்பு அல்ல. 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது போன்ற அக்னிவீரர்கள் வேலைசெய்கின்றனர். பல்வேறு நாடுகளும் இதே திட்டத்தைத்தான் கொண்டிருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது பீகாரில்தான் அதிகளவில் அக்னிபத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!