Published:Updated:

`` சிவபெருமானின் வாயிலிருந்து இரண்டு மொழிகள் வந்தன...'' - காசி தமிழ் சங்கமத்தில் யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

``இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும், நம் நாட்டில் உள்ள பல மொழிகளின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வண்ணமே அமைந்திருக்கிறது'' - யோகி ஆதித்யநாத்

`` சிவபெருமானின் வாயிலிருந்து இரண்டு மொழிகள் வந்தன...'' - காசி தமிழ் சங்கமத்தில் யோகி ஆதித்யநாத்

``இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும், நம் நாட்டில் உள்ள பல மொழிகளின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வண்ணமே அமைந்திருக்கிறது'' - யோகி ஆதித்யநாத்

Published:Updated:
யோகி ஆதித்யநாத்

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இந்நிகழ்வில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், `` காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறேன். ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிர்லிங்கமும், காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாத திருக்கோயிலின் ஜோதிர்லிங்கமும், தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள தொடர்பினை நன்கு புலப்படுத்துகிறது. இந்த தொடர் தான் தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள ஆதாரம்.

தமிழ் மொழி மிகவும் பழைமையான மொழி. ஒரு பழங்கதை இருக்கிறது. அதில் சிவபெருமானின் வாயிலிருந்து இரண்டு மொழிகள் வந்தன. ஒன்று தமிழ், மற்றொன்று சம்ஸ்கிருதம் அத்தகைய பழைமை வாய்ந்தது தமிழ். இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் நம் நாட்டில் உள்ள பல மொழிகளின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வண்ணமே அமைந்திருக்கிறது. '' என்றார்.