Published:Updated:

உ.பி: ``அக்னி வீரர்களுக்கு மாநில காவல்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்" - முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

``அக்னி வீரர்களின் நாட்டுக்கான சேவைக்குப் பிறகு, அவர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசின் காவல்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்." - யோகி ஆதித்யநாத்

உ.பி: ``அக்னி வீரர்களுக்கு மாநில காவல்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்" - முதல்வர் யோகி ஆதித்யநாத்

``அக்னி வீரர்களின் நாட்டுக்கான சேவைக்குப் பிறகு, அவர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசின் காவல்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்." - யோகி ஆதித்யநாத்

Published:Updated:
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை போன்ற ஆயுதப்படைகளுக்கு புதிய முறையில் ஆள்சேர்க்கும்விதமாக, `அக்னிபத்' எனும் புதிய திட்டத்தை கடந்த செவ்வாயன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய இந்தத் திட்டத்தில், பெண்கள் உட்பட தேர்தெடுக்கப்டும் இளைஞர்கள், ஆறு மாத ஆயுதப்படைப் பயிற்சியுடன் சுமார் நான்கு ஆண்டுக்காலம் இதில் பணியாற்றுவர். இதில் பணியாற்றுபவர்களுக்கு நான்காண்டு காலமும், மாதம் ரூ. 40,000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும் இவர்கள் `அக்னி வீரர்கள்' என்று என்றழைக்கப்படுவர். நான்காண்டுகாலப் பணி முடிந்த பிறகு, இதிலிருந்து 25 சதவிகித பேர் மட்டும் திறமையின் அடிப்படையில் நேரடியாக இந்திய ஆயுதப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மத்திய அரசின் இந்தப் புதிய திட்டத்துக்கு தற்போது பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் போராட்டங்களும் கிளம்பிவருகின்றன.

அக்னிபத் - திட்டம்
அக்னிபத் - திட்டம்

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த யோகி, ``பா.ஜ.க-வின் இந்த இரட்டை இன்ஜின் அரசாங்கமானது இளைஞர்களின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காகவும் தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறது. அக்னி வீரர்களின் நாட்டுக்கான சேவைக்குப் பிறகு, அவர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசின், காவல்படை மற்றும் இது தொடர்புடைய பிற பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்" என ட்வீட் செய்திருந்தார்.

முன்னதாக இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ், `இந்தத் திட்டத்தில் பணியாற்றும் பெரும்பாலானோர், நான்காண்டுகளுக்குப் பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே ஓய்வு பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல், அக்னிபத் திட்டம் இந்திய ஆயுதப்படையின் செயல்திறனையும் குறைக்கும்" என எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism