இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் இருக்கின்றன. இதனால் இந்த மாநிலத் தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திலுள்ள ஹஸ்தினாபூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யோகேஷ் வர்மா. இவர் தனது தொகுதியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் இடத்துக்குத் தனது காரில் சென்றார். வாக்கு எண்ணிக்கை 10-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையில், எந்த ஒரு தவறும் நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் வைத்திருந்த பைனாகுலரை எடுத்துக்கொண்டு காரில் நின்றவாறு அந்த இடம் முழுவதும் சுற்றிக் கண்காணித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணிக்காக சமாஜ்வாடி கட்சி சார்பில் சில நபர்களை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
