மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முதலமாண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், சம்ஸ்கிருத உறுதிமொழியேற்பு விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டீன் மீதான நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளது என விவாதம் எழுந்துள்ள நிலையில், மதுரை மருத்துவகல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது அவர், ``நாங்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை, மொழிபெயர்க்கப்பட்ட மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழியத்தான் ஆங்கிலத்தில் ஏற்றோம்.

கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தேசிய மருத்துவகல்லூரி இயக்குநரக அறிவிப்பின்படி தான் ஹிப்போகிரடிக், மகரிஷி சரக் ஷபத் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுக்கலாம் என்ற அறிவிப்பின்படி மாணவர் பேரவையினராகவே இணையதளத்தில் இருந்து எடுத்து உறுதிமொழி எடுத்தோம்,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நேற்றுதான் மாநில அரசு மருத்துவ கல்லூரி இயக்குநரகம் சரக் ஷபத் உறுதிமொழி எடுக்ககூடாது என சுற்றறிக்கை வந்துள்ளது, அவசர கோலத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்துவிட்டோம். தேசிய மருத்துவ கல்லூரி இயக்குநரகம் 2021 கல்வியாண்டு மாணவர்களுக்கான அறிவிப்பில் இருந்ததன் அடிப்படையில் நாங்களே மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்தோம் . தேசிய மருத்துவக் கல்வி இயக்குநரகம் இரு உறுதிமொழிகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என கூறியிருந்ததால், மாணவர் பேரவையினரான நாங்களே சரக் ஷபத் உறுதிமொழியை எடுத்தோம்.

சரக் ஷபத் உறுதிமொழி ஏற்பில் எந்த அரசியலும் இல்லை. உறுதிமொழி ஏற்பு தொடர்பாக நாங்கள் கல்லூரி நிர்வாகத்தில் யாரிடமும் கேட்காமலயே நாங்களாகவே உறுதிமொழியை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து உறுதிமொழி ஏற்றோம்" என்றார்
தொடர்ந்து சம்ஸ்கிருத உறுதிமொழி விவகாரம் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.