Published:Updated:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு... யாருக்குச் சாதகம்?

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர் -அதிமுக - பாஜக

இரண்டு கட்சிகளும் இந்த முடிவு தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் இருவரில் யாருக்குச் சாதகமாக அமையும் என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு... யாருக்குச் சாதகம்?

இரண்டு கட்சிகளும் இந்த முடிவு தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் இருவரில் யாருக்குச் சாதகமாக அமையும் என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.

Published:Updated:
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர் -அதிமுக - பாஜக

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இணைந்து தேர்தலைச் சந்தித்துவந்த அதிமுக - பாஜக, நடக்கவிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாகக் களமிறங்குகின்றன. மாநில அளவில் இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படாததால், தனித்துப்போட்டியிடுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதேவேளையில், பேச்சுவார்த்தைகள் முடிவதற்கு முன்பாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது அதிமுக.

அதிமுக
அதிமுக

இது குறித்து அதிமுக நிர்வாகிகள் பேசும்போது, ``பேச்சுவார்த்தையில் பாஜக-வினர் 20 சதவிகித இடங்களை எதிர்பார்த்தார்கள். அத்தனை இடங்களை அவர்களுக்கு ஒதுக்கிவிட்டால் எங்கள் கட்சி நிர்வாகிகள் எங்கே போவார்கள்... அதனால்தான், மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னோம். பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாகவே வேட்பாளர்களை அறிவிப்பது அதிமுக-வின் வழக்கமான பாணிதான். அவர்கள் கொஞ்சம் இறங்கி வந்திருந்தால், அவர்களுக்கு ஒதுக்கிய இடங்களில் வேட்பாளர்களை வாபஸ் வாங்கியிருப்போம். ஆனால், அவர்களும் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்திருக்கிறார்கள். இதனால் எங்களுக்கு எந்தப் பாதகமும் இல்லை'' என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாஜக-வைப் பொறுத்தவரை, தலைமையின் இந்த முடிவால், மாவட்ட அளவில் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், ``பலகட்ட ஆலோசனைக்குப் பிறகுதான் தனித்துப் போட்டி என்கிற முடிவை எடுத்திருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில் எங்கள் கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கட்சிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எங்கள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள். குறுகிய காலகட்டத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. இருந்தாலும்கூட அனைத்து இடங்களிலும் நாங்கள் நிற்பது நல்ல விஷயம்தான். ஒருசில இடங்களில் நிர்வாகிகள் சிலருக்கு வருத்தம் இருந்தாலும், கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு சிறப்பான அளவில் போட்டியிடுவார்கள்'' என்கிறார்கள் பாஜக தலைமைக் கழக நிர்வாகிகள்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக
மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக

இரண்டு கட்சிகளும் இந்த முடிவு தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் இருவரில் யாருக்குச் சாதகமாக அமையும் என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தராசு ஷ்யாம் (மூத்த பத்திரிகையாளர்)

`` அதிமுக-வின் கீழமட்டத் தொண்டர்கள் தனித்துப் போட்டியிடுவதை வரவேற்கிறார்கள். அவர்கள், பாஜக-வுக்கு வேலை பார்க்கத் தயாராக இல்லை, கடந்த காலங்களில் வேலை பார்க்கவுமில்லை. அதனால்தான், கடந்த தேர்தல்களில் பாஜக-வால் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. அதிமுக நிர்வாகிகளும் மிகவும் நிம்மதியாக உணர்கிறார்கள். பாஜக விலகியதால் தங்களுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க மெனக்கெட்டு வேலை செய்வார்கள்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

கிராமப்புறங்களில் இரட்டை இலைக்குச் செல்வாக்கு இருப்பதால், பேருராட்சிகளில் அதிமுக-வுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது. இரண்டு, மூன்று வார்டுகளில் வெற்றிபெற்றால்கூட பேருராட்சி துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளை வாங்கிவிடலாம். உள்ளூர் கூட்டணியில் அதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால், பாஜக-வுக்கு இப்படியொரு வாய்ப்பே இல்லை. அதுபோல, பேருராட்சி பகுதிகளில், பொங்கல் தொகுப்பு, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களில் திமுக-மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. ஆனால், அந்த எதிர்ப்பு வாக்குகள், இரண்டாகப் பிளவுபடுவது திமுக-வுக்கு லாபத்தைக் கொடுக்கும். வட மாவட்டங்களில் பாமக-வும் அதிமுக-வும், பாஜக-வுக்கு ஓரளவுக்கு செல்வாக்குள்ள கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களும் அதிமுக-வும் எதிர்ப்பு வாக்குகளைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அதனால், திமுக தங்களது வழக்கமான வாக்குவங்கியை வைத்தே வெற்றுபெறுவார்கள். நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் ஏற்கெனவே திமுக-தான் முன்னணியில் இருக்கிறது. அங்கு அவர்கள் பெரும்பான்மையாக வெற்றிபெறுவார்கள்''

ப்ரியன் (மூத்த பத்திரிகையாளர்) 

``அதிமுக-வுடன் கூட்டணியில் இருப்பதால், பாஜக-வுக்குத்தான் லாபமே தவிர, அதிமுக-வுக்கு லாபமில்லை. கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சில இடங்களில் பாஜக-வுக்குச் செல்வாக்கு இருப்பதாகச் சொன்னாலும், அங்கேயும் அதிமுக-வின் துணை இருந்தால்தான் பாஜக-வால் வெல்ல முடியும். தனியாக நின்று வெற்றிபெறுவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதனால், பாஜக-வைவிட்டுப் பிரிவது அதிமுக-வுக்கு லாபத்தைத்தான் தரவேண்டும். ஆனால், 'கூட்டணி தொடர்கிறது, உள்ளாட்சியில் மட்டும் தனித்துப் போட்டி' என்கிறார் எடப்பாடி பழனிசாமி. நிர்வாகிகள் மத்தியில் இது பெரிய பிரச்னையாக இல்லாவிட்டாலும், மக்கள் மத்தியில் அதிமுக-வின் மீது நம்பிக்கை வராது. அதனால், தனித்துப் போட்டியிட்டாலும் அதிமுக-வுக்கு பெரிய அளவில் பலனளிக்காது.

ப்ரியன்
ப்ரியன்

காரணம், சிறுபான்மையினர் மட்டுமல்லாமல் பிராமணர் அல்லாத படித்த, பெரும்பான்மையான இந்து இளைஞர்களிடமும் பாஜக எதிர்ப்பு மனநிலை என்பது தீவிரமாக உள்ளது. அவர்கள் நிச்சயமாக பாஜக-வுக்கோ, அதிமுக-வுக்கோ வாக்களிக்க மாட்டார்கள். தனித்து நின்றும் அந்த வாக்குகளை அதிமுக-வால் பெற முடியாமல் போகும். இது திமுக-வுக்கே சாதகமாக அமையும். அதிமுக ஒன்று பாஜக-வுடன் சேர்ந்து போட்டியிட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் முழுமையாக கூட்டணியைவிட்டு விலகியிருக்க வேண்டும். பாஜக எதிர்ப்பைக் கையில் எடுத்திருக்காவிட்டாலும் அமைதியாகவாவது இருந்திருக்கலாம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism