Published:Updated:

பெரிய மனுஷன் கூப்பிடுறார்னு வந்துட்டேன்! - ஓ.பி.எஸ் அணிக்குத் தாவிய எம்.எல்.ஏ பேட்டி

ஓ.பன்னீர்செல்வத்துடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வத்துடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன்

ஒரு படி மேலே போய், முக்குலத்தோரான நான் சொந்தச் சாதிக்கு துரோகம் செய்துவிட்டு, மாற்று சாதியை ஆதரிப்பதாக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், தடாலடியாக ஓ.பன்னீர்செல்வம் அணிக்குத் தாவியிருக்கிறார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் நிழலாகத் தொடர்ந்தவரின் இந்த திடீர் மனமாற்றத்தின் பின்னணி குறித்துத் தெரிந்துகொள்ள அவரிடமே பேசினோம்...

‘‘இத்தனை நாள்கள் எடப்பாடி அணியில் இருந்துவிட்டு திடீரென்று ஓ.பி.எஸ் அணிக்கு மாற என்ன காரணம்?’’

‘‘ஜூன் 23-க்கு முன்பு இருந்த நிலைமையே நீடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே, ‘கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்ற நோக்கத்திலேயே ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவு கொடுத்தேன்.’’

‘‘உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஓ.பி.எஸ்-ஸுக்குச் சாதகமாக வந்திராவிட்டால், இந்த முடிவை எடுத்திருக்க மாட்டீர்களா?’’

‘‘அப்படியில்லை... இரட்டை இலையும், கட்சியும் எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன். ‘அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், எல்லோரும் ஒற்றுமையாக வேண்டும்’ என்று ஓ.பி.எஸ் சொல்கிறார். ரெண்டு மூணு தடவைக்கு மேல் ஓ.பி.எஸ் என்னோடு போனில் பேசினார். ‘ஒன்றாக இணைய வாங்க’ என்று அழைப்பு விடுத்தார். பெரிய மனுஷன் கூப்பிடுறார்னு வந்துவிட்டேன்.’’

உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன்
உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன்

‘‘உங்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று அப்போது ஓ.பி.எஸ் தடுத்ததாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்தாரே?”

‘‘எனக்காகப் பரிந்துரை செய்தவர் உதயகுமார்தான், மறுக்கவில்லை. மற்றபடி, இது தொடர்பாக தலைமையில் நடந்தது குறித்து எனக்குத் தெரியாது.”

‘‘உங்களுக்குப் பெரிய அளவில் பணம் கொடுத்ததால்தான் அணி மாறியதாகச் சொல்கிறார்களே?’’

‘‘நான் எடப்பாடி அணியில் இருந்தபோது அவரிடம் ஐந்து கோடி வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். ஒரு படி மேலே போய், முக்குலத்தோரான நான் சொந்தச் சாதிக்கு துரோகம் செய்துவிட்டு, மாற்று சாதியை ஆதரிப்பதாக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தார்கள். அதையெல்லாம் எப்படி தாங்கிக்கொண்டேனோ... அதைப்போல இதையும் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான். அரசியலில் இப்படியெல்லாம் விமர்சனம் வரத்தான் செய்யும்.’’

பெரிய மனுஷன் கூப்பிடுறார்னு வந்துட்டேன்! - ஓ.பி.எஸ் அணிக்குத் தாவிய எம்.எல்.ஏ பேட்டி

‘‘ஓ.பி.எஸ் மகன்கள், சமீபத்தில் உங்களை அழைத்துப் பேசியதே பணப் பேரத்துக்காகத்தான் என்கிறார்களே?’’

‘‘அவர்கள் தொடர்புகொண்டு பேசியது உண்மை. ஓ.பி.எஸ்-ஸும் பேசினார். இதைப் பற்றி ஆர்.பி.உதயகுமாரிடமும் தெரிவித்திருக்கிறேன். மற்றபடி பணம் வாங்கிக்கொண்டு சேரவேண்டிய அவசியம் எனக்கில்லை.’’

“எடப்பாடி அணியிலிருந்து, உங்களைப்போல் யாரெல்லாம் ஓ.பி.எஸ் அணிக்கு வர வாய்ப்பிருக்கிறது?”

“கட்சி ஒன்று சேர வேண்டுமென நினைப்பவர்கள் நிச்சயம் வருவார்கள்.”