Published:Updated:

``இந்தியாவின் எதிர்காலம் குறித்துக் கவலைகொள்கிறேன்" - பாஜக எம்.பி வருண்காந்தி

பா.ஜ.க எம்.பி வருண்காந்தி

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க எம்.பி வருண்காந்தி, ``நாட்டில் 1.5 கோடி பணியிடங்கள் காலியாக இருந்தும், இளைஞர்கள் வேலையில்லாமல் வெறும் வயிற்றோடு அலைகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் தன் சொந்தத் தொகுதியான பிலிபிட்-ல் இரண்டு நாள் பயணமாகச் சென்றிருந்த பா.ஜ.க எம்.பி வருண்காந்தி, ஒரு கூட்டத்தில் பேசுகையில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் குறித்துத் தன் சொந்தக் கட்சியான பா.ஜ.க மீதே கேள்வியெழுப்பியுள்ளார்.

பிலிபிட்டில் நேற்று நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருண்காந்தி, ``இந்தியாவின் எதிர்காலம் குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். நாட்டில் 1.5 கோடி பணியிடங்கள் காலியாக இருந்தும், இளைஞர்கள் வேலையில்லாமல் வெறும் வயிற்றோடு அலைகின்றனர். வாக்குறுதியளித்தபடி, இரண்டு கோடி வேலைவாய்ப்புகளும் இன்னும் வழங்கப்படவில்லை. கோடிக்கணக்கான வேலையில்லாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் எனச் சொன்னதும் இன்னும் நடக்கவில்லை.

பாஜக
பாஜக

எங்களின் போராட்டம் என்பது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரச் சமத்துவத்துக்கானது. எல்லோருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதையே நம் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டமே நமது நாட்டின் உண்மையான போராட்டம். அனைவருடனும் இணைந்து பணியாற்றும்போது இது சாத்தியமாகும்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism