Published:Updated:

``யோகி அரசு மக்களைப் பிளவுபடுத்துவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை" - சோனியா தாக்கு!

சோனியா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது என சோனியா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

``யோகி அரசு மக்களைப் பிளவுபடுத்துவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை" - சோனியா தாக்கு!

உத்தரப்பிரதேசத்தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது என சோனியா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
சோனியா காந்தி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக, சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் நடைபெறவுள்ள மற்ற தொகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று காணொலி வாயிலாகப் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ``இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கின்றனர். நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது. மத்திய அரசில் சுமார் 12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், அரசு அதை நிரப்ப எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை" என்றார்.

அமித் ஷா, யோகி, மோடி
அமித் ஷா, யோகி, மோடி

அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டுவருகின்றனர். கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, மக்கள் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் படுக்கைகள்கூட இல்லாமல் கஷ்டப்பட்டனர். மேலும் சிலர் உயிரிழந்தனர். மறுபுறம், தொற்றுநோய் பலரின் வேலை, வணிகத்தையும் சீர்குலைத்துவிட்டது. அதேநேரத்தில் பலர் ஊரடங்கு காலகட்டத்தின்போது பல மைல்களுக்கு கால்நடையாக நடந்து சென்றனர். உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களைப் பிளவுபடுத்துவதைத் தவிர, வேறு எதையும் செய்யவில்லை. மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism