``2024 அல்லது 2026... தமிழகத்தில் பாஜக ஆட்சி!'' - அண்ணாமலை | Assembly Election Result 2022

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அது தொடர்பான செய்திகளின் முக்கியத் தொகுப்பு..!
``2024 அல்லது 2026... தமிழகத்தில் பாஜக ஆட்சி!'' - அண்ணாமலை
``2024 அல்லது 2026... தமிழகத்தில் பாஜக ஆட்சி!'' - அண்ணாமலை | Assembly Election Result 2022சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அந்தக் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டம்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் சோனு சூட் சகோதரிக்குப் பின்னடைவு!

மோகா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறங்கிய பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
கோவா, மணிப்பூரில் பாஜக முன்னிலை... ஆனால் பெரும்பான்மை?!
உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விடவும் அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. கோவா, மணிப்பூரில் பாஜக முன்னிலையில் இருந்தாலும், பாஜகவுக்கு தற்போது வரை பெரும்பான்மைக்கு தேவையான அளவுக்கு முன்னிலையில் இல்லை. இதனால் இந்த இரு மாநிலங்களிலும், ஆட்சி அமைக்க சுயேட்சை அல்லது பிற மாநில கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இதில் சில மாற்றங்கள் நிருக்கலாம்.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக!
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போதையை நிலையில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விடவும் அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளில், 238 தொகுதிகளிலும், உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளில் 43 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் நிலையில் இக்ருக்கிறது. அங்கு உள்ள 117 தொகுதிகளில் 90 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி!

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 115 இடங்களுக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் ஆம் ஆத்மி கட்சி 84 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 18 இடங்களிலும் அகாலி தளம் கூட்டணி 8 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் முன்னணியில் இருக்கிறது. தற்போதைய நிலையில் ஆம் ஆத்மி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விடவும் அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். காங்கிரஸ் மாநில தலைவர் சித்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
உத்தராகண்ட், மணிப்பூர் நிலவரம்..!
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 64 இடங்களுக்கான முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் பாஜக 34 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பாஜக 24 இடங்களிலும் காங்கிரஸ் 14 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
மனோகர் பாரிக்கரின் மகன் உத்பலுக்குப் பின்னடைவு!
பனாஜி தொகுதியில் போட்டியிட்ட கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த தொகுதியில் உத்பலை பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
பாஜக vs காங்கிரஸ்... கோவாவில் கடும் போட்டி... உதவுவாரா மம்தா?

கோவா சட்டப்பேரவை தேர்தலில் தற்போது மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்குமான முன்னணி நிலவரம் வெளிவந்திருக்கிறது. அதில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சி அமைக்க 21 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில் தற்போதையை மம்தா ஆதரவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். வாக்கு எண்ணிக்கையின் முடிவு வரை காத்திருப்போம்
உத்திர பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் லக்னோவிலிருந்து நேரலையில்!
யோகிக்கு டஃப் கொடுக்கும் அகிலேஷ்!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. என்றாலும் பல இடங்களில் அகிலேஷ் யாதவ்-ன் சமாஜ்வாதி கட்சி பாஜகவுக்கு கடு போட்டி அளித்து வருகிறது. 403 இடங்களை கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக தற்போது 120 இடங்களிலும், சமாஜ்வாடி 97 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
உ.பி-யில் பாஜக... பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை!
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வாக்கு எண்ணைக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறது.
5 மாநிலத் தேர்தல் முடிவுகள்... லைவ் அப்டேட்ஸ்!
தொடங்கியது விறுவிறு வாக்கு எண்ணிக்கை!
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையானது 5 மாநிலங்களிலும் தொடங்கியிருக்கிறது.
இன்னும் சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் சுற்றுகள் வாரியாக தெரியவரும்...
உத்திரப் பிரதேச தேர்தல் 2022 துவங்கியது வாக்கு எண்ணிக்கை. நேரடியாக மாநில தலைமைச் செயலகத்தில் இருந்து உங்களுக்காக
இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு!
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த இரண்டு மாதங்களாக நடந்து முடிந்தது. இதில், உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்துக்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், மணிப்பூர் மாநிலத்துக்கு இரு கட்டங்களாகவும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குக்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட இருக்கின்றன. இதில் பெரும்பாலும் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த கட்சி புதிதாக ஆட்சியமைக்கப்போகின்றன, அல்லது எந்த கட்சி ஆட்சியை தக்கவைக்கப்போகின்றன என்பது இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும்.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்:
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து முடிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்துக்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், மணிப்பூர் மாநிலத்துக்கு இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ம் தேதி, எண்ணப்படுகின்றன. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு இயந்திரங்கள், `ஸ்ட்ராங் ரூம்’ என்று அழைக்கப்படும் அறையில் வைக்கப்பட்டுள்ளன. மார்ச் 10 - தேதி மதியத்துக்குள் எந்த மாநிலத்தில், எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது தெரிந்துவிடும்!
Exit Polls: மணிப்பூரில் முந்தும் பா.ஜ.க... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Exit Polls: உ.பி-யில் முந்தும் பாஜக; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?!
Exit Polls: பஞ்சாபில் முந்தும் ஆம் ஆத்மி; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன!
Exit Polls: உத்தரகாண்ட் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன!
Exit Polls: பாஜக Vs காங்., இழுபறியில் கோவா - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!