Published:Updated:

உத்தராகாண்ட்: இடைத்தேர்தலில் வெற்றி... முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டார் புஷ்கர் சிங் தாமி!

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ( ட்விட்டர் )

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் புஷ்கர் சிங் தாமி வெற்றிபெற்றிருக்கிறார்.

உத்தராகாண்ட்: இடைத்தேர்தலில் வெற்றி... முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டார் புஷ்கர் சிங் தாமி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் புஷ்கர் சிங் தாமி வெற்றிபெற்றிருக்கிறார்.

Published:Updated:
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ( ட்விட்டர் )

உத்தரப்பிரதேசம், உத்தராகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

அதில் உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க 47 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். இதனால் அந்த மாநிலத்தில் புதிய முதலமைச்சர் குறித்து குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற புஷ்கர் சிங் காரணமாக இருந்தார் எனக் கூறி பா.ஜ.க தலைமை இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

புஷ்கர் சிங் தாமி
புஷ்கர் சிங் தாமி

அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலம், சம்பவாத் தொகுதியில் கடந்த மே 31-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க-வின் புஷ்கர் சிங் தாமியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்மலா கஹ்டோரி, சமாஜ்வாதி கட்சி சார்பில் மனோஜ் குமார் பட் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில், சம்பவாத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களைவிட 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புஷ்கர் சிங் முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டார்.

புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு பா.ஜ.க தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism