பா.ஜ.க தலைவருடன் சந்திப்பு, கட்சிப் பதவி பறிப்பு, பா.ஜ.க-வில் ஐக்கியம் என தி.மு.க-வில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியின் அரசியல் வாழ்க்கையில் அடுத்தடுத்த நாள்களில் அநேக ‘சம்பவங்கள்’ அரங்கேறிவிட்டன. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“எம்.பி பதவி கிடைக்கவில்லை என்பதற்காக... குறிப்பாக, அந்தியூர் செல்வராஜுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டதால்தான் நீங்கள் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிட்டதாக உங்களை விமர்சிக்கிறார்களே?’’

“கலைஞர் அழைத்த ஒரே காரணத்துக்காக, இருந்த பதவியை தூக்கி எறிந்துவிட்டு தி.மு.க-வுக்கு வந்தவன் நான். பதவிக்காக அலைகிறவன் இல்லை. என் சமூகத்திலிருந்து ஒருவர், தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகியிருக்கிறார். மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்கிறேன். அதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விளக்கம்கூடக் கேட்காமல் என்னை நீக்கிவிட்டார்கள். எம்.பி பதவி கேட்டதற்கும், நான் பா.ஜ.க-வில் சேர்ந்ததற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. தவிர, அந்தியூர் செல்வராஜுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைத்தற்கு வாழ்த்து தெரிவித்தவன் நான். எனக்குப் போட்டியாக அவரைக் கருதவில்லை. காரணம், அவர் எனக்குச் சமமானவர் கிடையாது.’’

“அந்தியூர் செல்வராஜ், ‘வி.பி.துரைசாமியை கருணாநிதியிடம் அழைத்துச் சென்றதே நான்தான்’ என்று கூறியிருக்கிறாரே?’’

“அவர் என்னைத் தலைவரிடம் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. 1984-ம் ஆண்டு ராசிபுரம் தொகுதியில் சீட்டுக் கேட்டு வீரபாண்டி ஆறுமுகம், பட்டணம்.தா.முத்து ஆகியோருடன் நான் முதன்முதலில் தலைவரைச் சந்தித்தேன். 1984-லிலேயே ராசிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் நான். 1989-ல் துணை சபாநாயகராக இருந்தபோது, அப்போதைய மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தியின் கூட்டத்தில்தான் நான் முதன்முதலில் செல்வராஜைப் பார்த்தேன். எனவே, அவர் சொல்வது உண்மை இல்லை.’’

“தி.மு.க., அது உருவான நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதாகவும், கட்சியில் சாதியப் பாகுபாடுகள் இருப்பதாகவும் எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?’’

“மற்ற துணைப் பொதுச்செயலாளர்களான ஐ.பெரியசாமி, நேரு போன்றவர்களை நடத்தியதைப்போல்தான் என்னை நடத்தினார்களா, வீட்டில் முடிவெடுக்கும் கூட்டங்களுக்கு என்னை அழைத்தார்களா என்பதையெல்லாம் நீங்கள் அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். மனம் நொந்துதான் நான் தி.மு.க-விலிருந்து விலகிவிட்டேன்.’’

“அது மட்டும்தான் காரணமா?’’

“அதுமட்டுமல்ல. எ.வ.வேலு என்ன நினைக்கிறாரோ அதுதான் தி.மு.க-வில் நடக்கிறது. அவர் கைகாட்டுபவருக்குத்தான் பதவி கிடைக்கும். அவரை அனைவரும் காலைத் தொட்டுக் கும்பிடுவார்கள். நான் அவரிடம் போய் நின்றதில்லை. அதற்கு அவசியமும் கிடையாது. அதனாலேயே நான் ஒதுக்கப்பட்டேன். அந்தியூர் செல்வராஜ் அப்படியல்ல; கனிவானவர். நல்லவர். வேலுவின் நம்பிக்கைக்குரியவர். அவர் சொல்படி கேட்பவர். அதனால்தான் அவருக்கு அந்தப் பதவி கிடைத்திருக்கிறது.’’

“பா.ஜ.க-வில் நீங்கள் சேர்வதற்கு காரணம் என்ன?”

“பா.ஜ.க தொடர்பான எந்தக் கேள்விகளுக்குமே இப்போது பதிலளிக்க முடியாது.”