Published:Updated:

`பண்டிகைக் காலம், கொரோனாவும் அதிகரிக்கிறது’-மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் எச்சரித்த மோடி

பிரதமர் மோடி
News
பிரதமர் மோடி

`இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தினார். டெல்லி, தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பிரதமர் மோடி அனைத்து மாவட்ட முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திவருகிறார்.

தடுப்பூசி
தடுப்பூசி
AP Photo/Altaf Qadri

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும், முன்களப் பணியாளர்கள், முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி போடும் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கியிருப்பதால் கொரோனா பரவலும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மோடி
மோடி

மேலும், ``கொரோனவை எதிர்க்க ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான். தடுப்பூசியைத் தவிர வேறு எதுவும் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்காது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். ஒமைக்ரான் வைரஸ் அதிக அளவிலான மக்களை பாதித்துவருகிறது. இதனால் மக்கள் அனைவரும் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், மாநிலங்களிடம் போதிய கொரோனா தடுப்பு ஊசி கையிருப்பு இருப்பதாகவும், முன்களப் பணியாளர்கள் அனைவரும் சீக்கிரமாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றுவருவதாகவும், கொரோனா தடுப்புப் பணியில் மத்திய அரசின் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றும் கூறினார்.

மேலும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான அனைத்து ஆலோசனைகளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், ஒமைக்ரான் பரவலைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு முழுமையாக தயார்நிலையில் உள்ளது என்றும் கூறினார்.