Published:Updated:

புதுவை: ``குடும்பங்களை அழித்துவிட்டு பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதில் என்ன பயன்?" - காங்கிரஸ் எம்.பி

காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

``கட்டபொம்மன் வீழ்த்த முடியாத மன்னன். அவனைக் காட்டிக்கொடுத்தது எட்டப்பன். புதுவையில் 8 எட்டப்பன்கள் சேர்ந்து காங்கிரஸை வீழ்த்தினார்கள். அந்த 8 எட்டப்பன்களும் ரங்கசாமியை இப்போது உதைக்கின்றனர்.” - வைத்திலிங்கம் எம்.பி

புதுவை: ``குடும்பங்களை அழித்துவிட்டு பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதில் என்ன பயன்?" - காங்கிரஸ் எம்.பி

``கட்டபொம்மன் வீழ்த்த முடியாத மன்னன். அவனைக் காட்டிக்கொடுத்தது எட்டப்பன். புதுவையில் 8 எட்டப்பன்கள் சேர்ந்து காங்கிரஸை வீழ்த்தினார்கள். அந்த 8 எட்டப்பன்களும் ரங்கசாமியை இப்போது உதைக்கின்றனர்.” - வைத்திலிங்கம் எம்.பி

Published:Updated:
காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

புதுவையில், மணவெளித் தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய எம்.பி வைத்திலிங்கம், "முதலமைச்சர், `ஒன்றும் செய்ய முடியவில்லை’ என நீதிபதியிடம் கேட்கிறார். யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் கேட்கவில்லை. ரங்கசாமி கேட்கவேண்டிய இடத்தில் கேட்கவில்லை. தப்பான இடத்தில் கதவைத் தட்டுகிறார். அப்படியென்றால் ரங்கசாமி மக்களை ஏமாற்றுகிறார் என அர்த்தம். அவர் அதிகாரிகள்மீது பழிபோடுகிறார். 

புதுவை
புதுவை

அதிகாரிகள் என்ன செய்வார்கள்... கவர்னர், மத்திய அரசைக் காரணம் சொல்ல அவர் மறுக்கிறார். ஆனால், அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுகிறார். அவர் முதலமைச்சர் தானே... அவரின் அதிகாரம் எங்கே போனது... வாக்காளர்களாகிய மக்கள் ஏமாந்துவிட்டனர். மோடிக்குப் புதுவையே தெரியாது. புதுவையில் பாஜக கிடையாது. அதை இறக்குமதி செய்தது ரங்கசாமி. ரங்கசாமி இல்லாவிட்டால் புதுவையில் பாஜக இல்லை. 'மோடியை நம்பி ஓட்டுப் போடுங்கள்' எனக் கூறியவர் ரங்கசாமி. இவர்களால்தான் நமக்கு ஆட்சி போனது. 

கட்டபொம்மன் வீழ்த்த முடியாத மன்னன். அவனை காட்டிக்கொடுத்தது எட்டப்பன். புதுவையில் 8 எட்டப்பன்கள் சேர்ந்து காங்கிரஸை வீழ்த்தினார்கள். அந்த 8 எட்டப்பன்களும் ரங்கசாமியை இப்போது உதைக்கின்றனர். அந்த உதையை வாங்கிக்கொண்டு, வலித்தாலும் நாற்காலியை விட்டுக்கொடுக்காமல் இருப்பவர் ரங்கசாமி. இதை மக்களிடம் சொல்லவேண்டிய வேலை காங்கிரஸுக்குத்தான் இருக்கிறது. புதுவையில் அதிமுக படுத்துவிட்டது. நமது கூட்டணியும் வேகமாகச் செயல்படவில்லை. எதையும் எதிர்பார்க்காமல் செயல்படும் காங்கிரஸ் கட்சிதான் வேகமாகச் செயல்பட வேண்டும். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. காங்கிரஸ் மட்டுமே துணிந்து நிற்கும் கட்சியாக இருக்கிறது.

பிரதமர் மோடியுடன் முதல்வர் ரங்கசாமி
பிரதமர் மோடியுடன் முதல்வர் ரங்கசாமி

புதுவையில் குழந்தைகளுக்குப் பால் தட்டுப்பாடு. ஆண்கள் மது குடித்து அழிந்துவிட்டனர். பெண்கள் விதவைகளாகும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களையும் அழிக்க பிராந்திக் கடையில் பெண்களுக்கு இலவச மது வழங்குகின்றனர். முதலமைச்சரிடம், `இப்படிக் கடைகளை திறப்பது நியாயமா?’ எனக் கேட்டால், "எனக்காகச் செய்யவில்லை, மக்களுக்காகச் செய்கிறேன். ரூ.1,000 கொடுக்க என்னிடம் காசு இல்லை. மற்ற திட்டங்களுக்குக் காசு இல்லை. இதிலிருந்துதான் பணம் தருகிறேன்" என்கிறார். குடும்பத்தை அழித்துவிட்டு ரூ.1,000 வழங்குவதில் என்ன பயன் இருக்கிறது?” என்றார் காட்டமாக.