Published:Updated:

"ரவீந்திரநாத், முத்தலாக் மசோதாவை ஆதரிக்கவில்லை!" - வைகைச்செல்வன் புது விளக்கம்

வைகைச்செல்வன்

“மக்களவையில் எம்.பி ரவீந்திரநாத் கூறிய கருத்துகள், வேறுவிதமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. 'முத்தலாக் மசோதாவில் 3 திருத்தங்களைச் செய்திருந்தால், நாங்கள் ஏற்போம்' என்றுதான் அவர் கூறியிருந்தார்.”

"ரவீந்திரநாத், முத்தலாக் மசோதாவை ஆதரிக்கவில்லை!" - வைகைச்செல்வன் புது விளக்கம்

“மக்களவையில் எம்.பி ரவீந்திரநாத் கூறிய கருத்துகள், வேறுவிதமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. 'முத்தலாக் மசோதாவில் 3 திருத்தங்களைச் செய்திருந்தால், நாங்கள் ஏற்போம்' என்றுதான் அவர் கூறியிருந்தார்.”

Published:Updated:
வைகைச்செல்வன்

வேலூர் தேர்தலில், மீண்டும் வெற்றிக்கனியை எட்டிப் பறித்திருக்கிறது, தி.மு.க. அ.தி.மு.க வாக்குவங்கி பலமாக உள்ள இத்தொகுதியில், 'எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும்' என்ற முனைப்போடு களமாடியது அ.தி.மு.க. சிறுபான்மையின மக்களின் வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே, கூட்டணிக் கட்சியான பி.ஜே.பி பற்றி எங்கும் வாய்திறக்காது, சாமர்த்தியமாகப் பிரசாரம் செய்துமுடித்தது, அ.தி.மு.க.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

பி.ஜே.பி தலைவர்களும் 'கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரமாக இருக்கிறோம். தேர்தல் பிரசாரம் செய்ய எங்களுக்கு நேரம் இல்லை. நாங்கள் ரொம்ப பிஸி!' என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டனர்.

இந்நிலையில், அ.தி.மு.க-வுக்குக் கிடைத்திருக்கும் தோல்வி குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம்...

வேலூர் தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு கிடைத்திருக்கும் இந்தத் தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஸ்டாலினுடன் கதிர் ஆனந்த்
ஸ்டாலினுடன் கதிர் ஆனந்த்

கடந்த முறை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தி.மு.க, இம்முறை சில ஆயிரங்கள் வாக்கு வித்தியாசத்தில்தான் எங்களிடமிருந்து வெற்றியை தட்டிப்பறித்திருக்கிறது. எனவே, இது தி.மு.க-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நகைக்கடன், கல்விக் கடன், வங்கிக் கடன்களை எல்லாம் தள்ளுபடிசெய்வோம். மாதம்தோறும் 6 ஆயிரம் ரூபாய் தருவோம்' என்றெல்லாம் மக்களிடையே பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி, கடந்த முறை வெற்றி பெற்றார்கள். இப்போது, மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள்.

கூட்டணிக் கட்சியான பி.ஜே.பி-யை நீங்கள் பிரசாரத்துக்கு அழைக்காததும், அ.தி.மு.க-வின் தோல்விக்கு ஒரு காரணமா?

மோடியுடன் எடப்பாடி
மோடியுடன் எடப்பாடி

நாங்கள் யாரையும் அழைக்கவில்லை என்றெல்லாம் கிடையாது. அது அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்தது. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம்தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தே.மு.தி.க-விலிருந்து பிரேமலதா, த.மா.கா-விலிருந்து ஜி.கே.வாசன் என எல்லோருமே ஒருங்கிணைந்து பிரசாரம் செய்தோமே!

சிறுபான்மை இன மக்கள் நிறைந்திருக்கும் தொகுதியில், பி.ஜே.பி-யின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்றுதான் அக்கட்சியைப் புறக்கணித்தீர்களா?

இஸ்லாம் பெண்கள்
இஸ்லாம் பெண்கள்

அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் என்றைக்குமே இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்; இருப்போம்.

நாடாளுமன்றத் தேர்தலில், 'பி.ஜே.பி-யோடு கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால், தி.மு.க-வுக்கு கடுமையான சவாலைக் கொடுத்திருக்கும் அ.தி.மு.க' என எடுத்துக்கொள்ளலாமா?

மோடியுடன் எடப்பாடி
மோடியுடன் எடப்பாடி

அதுகுறித்தெல்லாம் நான் எந்தக் கருத்தும் சொல்லமுடியாது. அதை கட்சித் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும். தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள்தான் தீர்ப்பளிக்கிறார்கள். இந்த முறையும் 'இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் நாங்கள்' என்று பொய்யான வாக்குறுதியைக் கொடுத்துதான் தி.மு.க ஜெயித்திருக்கிறது. சிறு வித்தியாசத்தில்தான் அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு கூடியிருக்கிறது. மற்றபடி, அ.தி.மு.க-வுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது!

முத்தலாக் விவகாரத்தில், மக்களவையில் ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்ததெல்லாம் வேலூர் தேர்தலை மையப்படுத்திதானே?

முத்தலாக்
முத்தலாக்

முத்தலாக் தடைச் சட்டத்தை அ.தி.மு.க எப்போதுமே எதிர்த்துதான் வந்திருக்கிறது. தேர்தல் அறிக்கையிலேயேகூட அதைத்தான் சொல்லியிருக்கிறோம். அதனால், தேர்தலை மையப்படுத்தி நிலையை மாற்றிக்கொண்டோம் என்பதெல்லாம் உண்மையில்லை.

அப்படியென்றால், மக்களவையில் அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் குமார், முத்தலாக் தடைச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசியது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலா?

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

இல்லையில்லை... கட்சிக் கட்டுப்பாட்டையெல்லாம் அவர் மீறவில்லை. முத்தலாக் விவகாரத்தில், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அ.தி.மு.க ஒரே நிலைப்பாட்டைத்தான் எடுத்திருக்கிறது. ஆனால், மக்களவையில் ரவீந்திரநாத் கூறிய கருத்துகள் வேறுவிதமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. 'முத்தலாக் மசோதாவில் 3 திருத்தங்களைச் செய்திருந்தால், நாங்கள் ஏற்போம்' என்றுதான் அவர் கூறியிருந்தார்.