Published:Updated:

ஒன் பை டூ

வைகைச்செல்வன் - எம்.எம்.அப்துல்லா
பிரீமியம் ஸ்டோரி
வைகைச்செல்வன் - எம்.எம்.அப்துல்லா

‘அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு எனும் முன்னெடுப்பு, 2024 தேர்தல் கணக்கோடு, தேசியத் தலைமையாகத் தன்னை முன்னிறுத்தும் ஸ்டாலினின் முயற்சி’ எனும் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்?

ஒன் பை டூ

‘அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு எனும் முன்னெடுப்பு, 2024 தேர்தல் கணக்கோடு, தேசியத் தலைமையாகத் தன்னை முன்னிறுத்தும் ஸ்டாலினின் முயற்சி’ எனும் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்?

Published:Updated:
வைகைச்செல்வன் - எம்.எம்.அப்துல்லா
பிரீமியம் ஸ்டோரி
வைகைச்செல்வன் - எம்.எம்.அப்துல்லா

வைகைச்செல்வன் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளர்

“சரிதான். இந்தியா முழுமைக்குமான தலைவன் தான்தான் என்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதை நோக்கியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் தன்னுடைய பெயர் தெரிய வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட துருப்புச்சீட்டுதான் சமூகநீதி என்ற முகம். சமூகநீதிக்காக இந்தியா முழுவதும் ஒருமித்த குரல் எழ வேண்டும் என்ற மகத்தான நோக்கத்தில்தான் அ.இ.அ.தி.மு.க அரை நூற்றாண்டாகச் செயலாற்றி வருகிறது. சமூகநீதிக்காக நாங்கள் செய்ததில் தி.மு.க துளிகூட இதுவரை செய்ததில்லை. எனவேதான், இப்போது சமூகநீதிக் காவலர் தான்தான் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் திடீரென புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை மாபெரும் தலைவராகக் காட்டிக்கொள்ள வேண்டும். அதன் மூலம் பலன்களை அடைய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் என்கிறோம். கருணாநிதி காலந்தொட்டு அமைதியாக இருந்துவிட்டு, திடீரென சமூகநீதி என்ற விஷயத்தை தி.மு.க கையில் எடுத்திருப்பது, மக்களை ஏமாற்ற அவர்கள் அரங்கேற்றும் நாடகமாகவே நாங்கள் பார்க்கிறோம்.”

ஒன் பை டூ
ஒன் பை டூ

எம்.எம்.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க

“ஆமாம்... தலைவர், பதவிக்காகத்தான் செய்கிறார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்து மக்கள் பட்டம், பதவி பெற வேண்டும் என்பதற்காகத்தான் செய்துகொண்டிருக்கிறார். தவழ்ந்து போய் சசிகலாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. அதனால், அவருக்கு யார் என்ன பேசினாலும் அது பதவியின் பொருட்டுதான் செய்கிறார்கள் என்று தோன்றும். பதவியை நோக்கியே இயங்குவது, அதற்காக எதுவும் செய்வது, பேசுவது என்பது எடப்பாடியின் பிறவி குணம் என்பதால், அவரால் அப்படித்

தான் யோசிக்க முடியும். ஆனால், சமூகநீதியினால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியைப்போல, பெற்ற உரிமையைப்போல இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமுள்ள மக்கள் பெற வேண்டும் என்று தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார். அரசின் பல்வேறு பதவிகளுக்கும் அனைத்துத் தரப்பினரும் வர வேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் அவர் செயல்படுகிறார்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism