Published:Updated:

`காசு எங்க... இல்லையா; போயிட்டே இரு!’ - செல்ஃபி எடுத்த தொண்டர்களிடம் கறார் காட்டிய வைகோ

ஆம்பூரில் தன்னுடன் போட்டோ எடுக்க அருகில் வந்த ம.தி.மு.க தொண்டர்களிடம் வைகோ 100 ரூபாய் வசூல் செய்தார். பணம் இல்லாத சிலரிடம் வைகோ கறாராகப் பேசி விரட்டியதால் தொண்டர்கள் வேதனைப்பட்டனர்.

vaiko
vaiko

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி அல்லது போட்டோ எடுக்க விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. தவிர, வைகோவுக்குச் சால்வை அணிவிக்கக் கூடாது. அதற்குப் பதிலாகவும் கட்சிக்கு நிதி வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

100 ரூபாயைக் கேட்டு பெற்றுக்கொண்ட  வைகோ
100 ரூபாயைக் கேட்டு பெற்றுக்கொண்ட வைகோ

தொண்டர்கள் அனைவரும் வாழ்நாள் உறுப்பினராக உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனால், வைகோ எங்கு சென்றாலும் தன்னுடன் செல்ஃபி எடுக்கும் தொண்டர்களிடம் 100 ரூபாய் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வைகோ இன்று வேலூர் மாவட்டம் வழியாக காரில் சென்றார். ராஜ்யசபா எம்.பி-யான பிறகு முதல் முறையாக வரும் வைகோவுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கத் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

‘100 ரூபாய் எங்க... இல்லையா, போயிட்டே இரு!’
தொண்டர்களிடம் கறாராகப் பேசிய வைகோ

முன் கூட்டியே, ``வைகோவுக்கு யாரும் சால்வை அணிவிக்கக் கூடாது. போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினால் 100 ரூபாய் கொடுக்க வேண்டும்’’ என்று மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதை நினைவில் வைத்துக்கொண்டு தொண்டர்களும் உற்சாகமாக இருந்தனர்.

`காசு எங்க... இல்லையா; போயிட்டே இரு!’ - போட்டோ எடுக்க வந்த தொண்டர்களிடம் கறார் காட்டிய வைகோ #Vaiko #MDMK

Posted by Junior Vikatan on Wednesday, August 14, 2019

ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வந்திறங்கிய வைகோவை பட்டாசு வெடித்து ம.தி.மு.க-வினர் உற்சாகமாக வரவேற்றனர். அவருடன் செல்ஃபி, போட்டோ எடுக்கப் பலர் முண்டியடித்தனர். போட்டோவுக்கு `போஸ்’ கொடுத்த வைகோ 100 ரூபாயைக் கேட்டு பெற்றுக்கொண்டார்.

வைகோவுடன் போட்டோ எடுத்துக்கொண்ட சிறுவர்கள்
வைகோவுடன் போட்டோ எடுத்துக்கொண்ட சிறுவர்கள்

தொண்டர்கள் சிலர் 100 ரூபாய் கூட இல்லாமல் போட்டோ எடுத்துக் கொள்ள சிரித்த முகத்துடன் அருகில் சென்றனர். அவர்களிடம், `காசு எங்க... இல்லையா, போயிட்டே இரு...’ என்று வைகோ கறாராகப் பேசினார். இதனால், அவர்கள் வருத்தமடைந்து விலகிச் சென்றனர். வைகோவின் இந்தச் செயல் அங்கிருந்த தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.