Published:Updated:

``இந்துத்துவக் கோட்பாட்டுக்கு வலு சேர்க்க சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கமா?” - வைகோ கடும் கண்டனம்

இந்துத்துவக் கோட்பாட்டுக்கு வலு சேர்க்க சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

``இந்துத்துவக் கோட்பாட்டுக்கு வலு சேர்க்க சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கமா?” - வைகோ கடும் கண்டனம்

இந்துத்துவக் கோட்பாட்டுக்கு வலு சேர்க்க சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published:Updated:

சிபிஎஸ்இ தனது பாடத்திட்டத்திலிருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை உள்ளிட்ட பாடங்களை நீக்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ``உலகம் அறிந்த இந்திய வரலாற்றை பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் மதவெறி நோக்கத்தில் திரித்து எழுதுகிற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். அதற்காகப் பள்ளிப் பாடங்களை நீக்கியும், மாற்றங்கள் செய்துவருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கான வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திலிருந்து பனிப்போர் யுகம், ஆப்பிரிக்க -ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழில்புரட்சி ஆகிய பாடங்களை நீக்கியிருக்கிறது.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

இந்துத்துவ கோட்பாட்டுக்கு வலு சேர்க்க சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்து சனாதனக் கோட்பாட்டை நிலைநிறுத்தவும் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே மொழி எனும் இந்து ராஷ்டிரக் கொள்கைக்கு வலு சேர்க்கவும், வரலாற்று உண்மைகளை மறைத்தும் திரித்தும் பள்ளிப் பாடங்களை மாற்றுவது கடும் கண்டனத்துக்கு உரியது. ஜெர்மானிய ஹிட்லர் அரசும், இத்தாலியின் முசோலினி அரசும் இப்படித்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச்சலவை செய்வதற்கு பாடத்திட்டங்களில் பாசிச நச்சுக் கருத்துகளைத் திணித்தார்கள். வரலாற்றுப் பாடங்களை நீக்குவதையும், இந்துத்துவா கருத்துகளைத் திணிப்பதையும் பாஜக அரசு கைவிட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism