Published:Updated:

`ஏழு பேர் விடுதலையில் மத்திய அரசு தடையாக இருக்கிறது!’ - குற்றம்சாட்டும் வைகோ

வைகோ
வைகோ

``சமூகநீதியைப் பாதுக்காக்கத்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார் வைகோ.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

வைகோ
வைகோ

மதுரை வந்திருந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ``சதாசிவம் நீதிபதியாக இருந்தபோது தூக்குத் தண்டனையை ரத்து செய்து சிறையிலிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கினார்.

உடனே மாநில அரசு மூன்றே நாளில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. ஆனால், ஆளுநரோ அதைக் குப்பையில் போட்டார். தற்போது ஏழு பேரையும் தமிழக அரசு விடுதலை செய்வதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது" என்றவரிடம்,

வைகோ
வைகோ

``அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் விமர்சிக்கப்படுகிறதே?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

``சமூகநீதியைப் பாதுக்காக்கத்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே உள்ள அர்ச்சகர்களின் உரிமையைப் பறிப்பதற்காக அல்ல. இது இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய சமூகநீதி" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கொடநாடு கொலை குறித்து மறுவிசாரணை செய்யக் கூடாது என அதிமுக-வினர் கூறுகின்றனரே...” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``கொடநாடு கொலைச் சம்பவம் என்பது படுபயங்கர திட்டமிட்ட படுகொலை. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கனகராஜ் என்பவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

வைகோ
வைகோ

அங்கு எவ்வளவு பணம், நகைகள், ஆவணங்கள் இருந்தன என்பது பற்றி அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். கொலை, கொள்ளை இரண்டும் அங்கு நடந்துள்ளன. அதனால், விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு