Published:Updated:

`பூமித்தாயே, எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா!' - சுர்ஜித்துக்காகக் கண்கலங்கும் வைகோ

``சுர்ஜித் வில்சன் பசி, தாகத்தால் பரிதவிப்பானே என்ற கவலையில், விரைந்து இயங்கி வருகின்றனர். தாங்கள் பெற்ற குழந்தைபோலக் கருதி, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகின்றனர்.''

`பூமித்தாயே, எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா!' - சுர்ஜித்துக்காகக் கண்கலங்கும் வைகோ

``சுர்ஜித் வில்சன் பசி, தாகத்தால் பரிதவிப்பானே என்ற கவலையில், விரைந்து இயங்கி வருகின்றனர். தாங்கள் பெற்ற குழந்தைபோலக் கருதி, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகின்றனர்.''

Published:Updated:

``கோடிக்கணக்கான தமிழர்களின் கவலை தோய்ந்த கவனம், நடுக்காட்டுப்பட்டியை நோக்கியே இருக்கிறது. ஆம்; ஆழ்துளைக் கிணறுக்குள் விழுந்து கிடக்கின்ற, 2 வயதுக் குழந்தை சுர்ஜித் வில்சன், உடல் நலனோடு மீண்டு வர வேண்டும் என்று, பதைபதைப்புடன் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்தக் குழந்தை அடைந்து இருக்கின்ற அதிர்ச்சியையும் அச்சத்தையும் கற்பனை செய்யவே முடியவில்லை. இப்படி ஒரு துன்பக் கொடுமை, 2 வயதுக் குழந்தைக்கு ஏற்பட்டு இருப்பது, தாங்கொணாத் துயரத்தைத் தருகின்றது.

மீட்பு பணி
மீட்பு பணி

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பிரிட்டோ ஆரோக்கியதாஸ் - கலா மேரி இவர்களின் இரண்டு வயதுக் குழந்தை சுர்ஜித் வில்சன், வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக, ஆழ்துளைக் கிணறுக்குள் விழுந்த செய்தி பரவியதும், திருச்சி மாவட்ட ஆட்சியரும் மீட்புப் படையினரும் அந்த இடத்துக்கு விரைந்தனர். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும், மூன்று நாள்களாகக் குழந்தையை மீட்கும் முயற்சிகளில் மிகுந்த கவலையோடு கடமை ஆற்றுகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுர்ஜித் வில்சன் பசி, தாகத்தால் பரிதவிப்பானே என்ற கவலையில், விரைந்து இயங்கி வருகின்றனர். தாங்கள் பெற்ற குழந்தை போலக் கருதி, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகின்றனர். தகுந்த கருவிகளைக் கொண்டு மீட்கும் பணி தொடர்கின்றது. அமைச்சர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளில், எதிர்பாராத தடைகளும் ஏற்படுகின்றன. மழை அச்சுறுத்துகின்றது; துளைக் கருவிகளும் பழுதாகிவிடுகின்றன.

வைகோ
வைகோ

விண்ணில் லட்சக்கணக்கான மைல் தொலைவைக் கடந்து சந்திரனில் இறங்கவும், ஆய்வு செய்யவும், செவ்வாய்க்கோளுக்கு விண்கலங்களை அனுப்பவும் வளர்ந்துவிட்ட அறிவியல் காலத்தில், குழந்தை சுஜித்தை மீட்க எவ்வளவு போராட்டம்?

பெற்றோருக்கு இரண்டாவது குழந்தை சுர்ஜித் வில்சன், மிகவும் சுறுசுறுப்பாகவும், ஒளி படைத்த கண்களால் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய பொலிவும் கொண்டவன் ஆவான்.

அந்தப் பச்சிளங் குழந்தைக்கு இப்படி ஒரு துன்பமா? என்று கருதி, கோடிக்கணக்கான மக்கள், தீபாவளிப் பண்டிகையில் நாட்டம் கொள்ளாமல், தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னரே அமர்ந்து இருக்கின்றனர். குழந்தை சுர்ஜித் வில்சன் மீட்கப்பட வேண்டும் என அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சுர்ஜித் மீட்புப் பணி
சுர்ஜித் மீட்புப் பணி

கண்ணீரில் பரிதவிக்கும் பெற்றோருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் யாரால் ஆறுதல் சொல்ல முடியும்? குழந்தை சுர்ஜித் வில்சன் மீண்டும் பெற்றோரின் கைகளில் தவழும்போதுதான் அனைவரின் கவலையும் நீங்கும். விரைவில் நல்ல செய்தி வர வேண்டும் என ஏங்கும் இதயங்களுள் என் மனமும் ஒன்று.

ஏ ஆழ்குழாய்க் கிணறே! பூமித்தாயே, இதுவரை அந்தக் குழந்தையை வைத்து இருந்தது போதும், எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா!” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.