Published:Updated:

`தடைக்கற்களைத் தாண்டி நாடாளுமன்றத்துக்குள் வைகோ நுழைவார்!' - ம.தி.மு.க நம்பிக்கை

தடைகளைத்தாண்டி ராஜ்ய சபாவில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் குரல் ஒலிக்கும் என ம.தி.மு.க-வினர் உறுதியாக நம்புகின்றனர்.

வைகோ
வைகோ

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில், `நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது இந்திய அரசுக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததால், வைகோ மீது தேசத் துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வைகோ
வைகோ

இது தொடர்பாக இன்று நீதிமன்றத்துக்கு வந்த வைகோவிடம் நீதிபதி,, ''இந்த வழக்கில் உங்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கிறேன்'' என்றும் ''10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்'' என்றும் தீர்ப்பளித்தார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் தனக்கான அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார் வைகோ. மேலும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் ஜாமீன் வழங்கக் கோரியும் வைகோ மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, ஒரு மாதம் தீர்ப்பை நிறுத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். இது தொடர்பாக ம.தி.மு.க-வைச் சேர்ந்த நன்மாறனிடம் பேசினோம். ``நீதிமன்ற தீர்ப்பின்போது, வைகோ நான் குறைந்தபட்ச தண்டனை கேட்கவில்லை. அதிகபட்ச தண்டனையே கொடுங்கள் என்றார். பெரியார், நீதிமன்றத்தில் `எனக்கு உச்சபட்ச தண்டனை கொடுங்கள்.

சட்டப்படி இந்தத் தீர்ப்பால், அவர் ராஜ்யசபா செல்வதற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
நன்மாறன், ம.தி.மு.க
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அவருடைய வழியில் வந்த நான், எனக்கும் உச்சபட்ச தண்டனை வேண்டும் என்பதை பதிவு செய்கிறேன்' என்றார் வைகோ. இந்தத் தீர்ப்பால், சட்டப்படி அவர், ராஜ்யசபா செல்வதற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. அவர், வழங்கிய தண்டனையை நீதிமன்றத்தில் மனுக்கொடுத்து, ஒரு மாதம் இடைக்காலமாக நிறுத்திவைத்துள்ளனர். ஒருமாதத்துக்குள் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி இவர் பேசியது குற்றமாகாது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. `அரசுக்கு எதிராக அமைந்துள்ளது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இன்னும் பல தடைகள் இருக்கின்றன.

வைகோ
வைகோ

வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டும், பிறகு அதை ஏற்க வேண்டும். இவற்றையெல்லாம் கடக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு நமக்கு எந்தப் பாதகத்தையும் ஏற்படுத்தவில்லை. தடைக்கற்களைத்தாண்டி நாடாளுமன்றத்துக்குள் வைகோ நுழைவார்” என்றார்.