Published:Updated:

அதே தீவிரம்... அதே ஆவேசம்... - வைகோவின் வீரியம் காட்டும் 10 பகிர்வுகள்

''ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன்!''

2009-ல் தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "எனக்கு இன்று மகிழ்ச்சியான நாள். ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என்று பேசினேன். நான் பேசியது தேசத் துரோகம் அல்ல. என் கருத்தை தொடர்ந்து விதைப்பேன். விடுதலை புலிகளை ஆதரித்து தொடர்ந்து பேசுவேன். ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன்" என்று ஆவேசத்துடன் கூறினார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், விடுதலைப்புலிகள் மீதான ஆதரவு நிலைப்பாட்டிலும் வைகோவின் தீவிரமும் ஈடுபாடும் அப்படியே இருக்கிறது என்பதைக் காட்டும் விகடன் செய்திப் பகிர்வுகளில் 10 பதிவுகள் இதோ...

2
வைகோ

பிரபாகரன் மகன் படுகொலை: உலகத்தின் நீதியே செத்துவிட்டதா என வைகோ ஆதங்கம்!

> பிப்.19, 2013: "ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளைவிட, சிங்களவன் செய்த தமிழ் இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்?" > பிரபாகரன் மகன் படுகொலை: உலகத்தின் நீதியே செத்துவிட்டதா என வைகோ ஆதங்கம்! > முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க

3
வைகோ

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?

> நவ.19, 2015: "நாங்கள் அறிந்த மட்டிலுமே 20,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியில் காணாமல் போயிருக்கின்றனர் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இலங்கைத் தீவில் இனப்படுகொலை தொடர்ந்து நடைபெறுகிறது என்பதற்கு மேலும் ஒரு ஆதார சாட்சியாக மூவர் குழுவின் தகவல்கள் அமைந்துள்ளன. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா? இலங்கைக் கொலைக்களத்திற்கு ஆதாரங்களைத் தேட வேண்டுமா?" > ஈழத்தமிழர் படுகொலைக்கு புதிய சான்றுகள்: அறப்போராட்டத்திற்கு வைகோ அறைகூவல்! > முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க

4
வைகோ

இனப்படுகொலையை மூடிமறைக்க இலங்கை அரசுக்கு இந்தியா உதவுகிறது: வைகோ

> ஜூன் 20, 2016: "ரோமாபுரி பற்றி எரிந்தபோது மன்னன் நீரோ பிடில் வாசித்தான் எனப் பழிக்கப்படுகிறான்; அதுபோல ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதி கேட்கின்றபோது மோடி விளையாட்டு அரங்கைத் திறந்து வைத்து விழா நடத்துகிறார். எருதுக்கு நோவு காக்கைக்குக் கொண்டாட்டம், உலகமெல்லாம் வாழும் தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களின் வளரும் பிள்ளைகளும் , தாய்த் தமிழகத்திலே வாழுகின்ற மான உணர்வு கொண்ட இளந்தமிழர்களும், சிங்கள, இந்திய அரசுகள் செய்கின்ற மாயமால வேலைகளைப் புரிந்து கொண்டு தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்." > இனப்படுகொலையை மூடிமறைக்க இலங்கை அரசுக்கு இந்தியா உதவுகிறது: வைகோ குற்றச்சாட்டு! > முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க

5
வைகோ

'பிரபாகரனின் ஆசை என்ன தெரியுமா?'

> நவ.26, 2016: "சேகுவேரா ஒருமுறை சொன்னார்: 'என் கையில் இருக்கின்ற இந்த நல்ல துப்பாக்கி, போர்வீரனுக்குப் பயன்படட்டும்; நான் ஒரு நோயாளி; எனக்கு ஒரு பழையத் துப்பாக்கி இருந்தால் போதும்' என்று சொன்னார். எதிரிகளிடம் பிடிபட்ட நிலையில், கடைசிக் கட்டத்தில் தன்னைச் சுட வந்தவனிடம் நெஞ்சை நிமிர்த்திக் காட்டி, 'நன்றாகக் குறிபார்த்துச் சுடு' என்று சொன்வர் சேகுவேரா. உலகம் போற்றுகின்ற அந்த மாவீரர்கள் எல்லோரையும் விடச் சிறந்தவர் பிரபாகரன்." > 'பிரபாகரனின் ஆசை என்ன தெரியுமா?' -வைகோ சொல்லும் ஈழத்து ரகசியம் > முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க

6
வைகோ

நீதி வழங்குங்கள்'- ஜெனீவாவில் வைகோ ஆவேசம்

> செப்.27, 2017: "இலங்கையில் தமிழர் தாயகம் நாஜிகள் நடத்திய சித்ரவதைக் கூடம்போல ஆகிவிட்டது. எங்கள் இதயக் குமுறலை, வேதனைப் புலம்பலை, பொங்கி வரும் கண்ணீரை மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் பாருங்கள்; எங்களுக்கு நீதி வழங்குங்கள்" என்று ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசினார். > 'எங்கள் இதயக் குமுறலைக் கேளுங்கள்; நீதி வழங்குங்கள்'- ஜெனீவாவில் வைகோ ஆவேசம் > முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க

7
வைகோ

"என்னைச் சிறையில் அடையுங்கள்"

> ஏப்.12, 2017: தேசத் துரோக வழக்கு விசாரணையின்போது, "என்னைச் சிறையில் அடையுங்கள்" என்று நீதிபதியிடம் முறையிட்டதோடு, ''பிணையும் எனக்கு வேண்டாம்'' என்று கூறி பதினைந்து நாள்கள் சிறைவாசத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர் வைகோ. > சிறையில் வைகோ என்ன செய்கிறார்? > முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க

8
வைகோ

இது இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை!"

> ஆக.4, 2017: "என்னையும்கூட 'புலிகளில் ஒருவன்' என்று இந்தியா அறிவித்தது. அதனாலேயே இன்றும் என்னால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் சிறு அளவுகூட எனக்குக் கவலை இல்லை. ஈழப்போர் முடிந்துவிட்டதாக இந்தியாவும், சிங்களவனும் நினைக்கவேண்டாம். என் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். அதனால் ஈழப்போர் தொடரும்... இது இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை.!" என்று முழங்கினார் வைகோ. > "ஈழப்போர் தொடரும்... இது இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை!" - வைகோ > முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க

9
வைகோ

விடுதலை வெளிச்சத்தை வழங்கும் காலம் மலர்ந்தே தீரும்

> நவ.16, 2017: "பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட ராணுவத்தினர், ‘ஐ.நா-வின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்’ என்று கூறி யுள்ளார். ஈழத்தமிழர்களைச் சூழ்ந்துள்ள நரக இருள் எப்போது விலகும்? எப்பொழுது விடியும்? என்ற ஏக்கப் பெருமூச்சு எழுந்தாலும், மான உணர்வுள்ள தமிழர்கள், ஈழத்திலும் புலம் பெயர் நாடுகளிலும், தாய்த் தமிழகத்திலும் வீறுகொண்டு எழுந்து நீதியை நிலைநாட்டி, ஈழத்துக்கு விடுதலை வெளிச்சத்தை வழங்கும் காலம் மலர்ந்தே தீரும்." > இலங்கையில் தமிழர்களைச் சித்ரவதைசெய்வது தொடர்கிறது..! - வைகோ வேதனை > முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க

10
வைகோ

"விடுதலைப் புலிகள் மீள் வருகையே ஈழத்தமிழரைப் பாதுகாக்கும்..!''

> ஜூலை 7, 2018: "விடுதலைப்புலிகள் மீள் வருகையே ஈழத்தமிழரைப் பாதுகாக்கும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்ததுபோல், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துகள் விருட்சமாவதைப்போல இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம்'' என்று வைகோ கூறியுள்ளார். > "விடுதலைப் புலிகள் மீள் வருகையே ஈழத்தமிழரைப் பாதுகாக்கும்..!'' - வைகோ > முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க

11
வைகோ

'விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன்'

ஆக.06, 2018: "விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத இயக்கம் இல்லை என ஜெனீவா நீதிமன்றமே உத்தரவு பிறபித்துள்ளது. இந்த இயக்கத்தின் தடையால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அரசு தரப்பு வாதம் முன் வைத்தது. ஆனால், நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளன், அனுதாபி என்ற முறையில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளேன். அடிப்படையிலேயே இந்தத் தடை நிராகரிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து நான் எடுத்துரைத்துவருகிறேன். வரும் 14-ம் தேதியும் இதையே எடுத்துரைப்பேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கும் வரை தொடர்ந்து சட்டரீதியாகப் போராடுவேன்." > 'விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன்' - நீதிமன்ற வளாகத்தில் வைகோ பேட்டி > முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க

அடுத்த கட்டுரைக்கு