Published:Updated:

`சிறந்த தன் திறன் செயல்பாட்டு நகரம்' - மத்திய அரசின் விருதைப் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி

சர்வே முடிவுகளில், இந்திய நகரங்களில் மக்கள்தொகை 25,000 எண்ணிக்கைக்குக் குறைவான நகரங்கள் பிரிவில் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தமிழ்நாடு அளவில் முதல் இடமும், தென்னிந்திய அளவில் இரண்டாம் இடமும் பிடித்து அசத்தியிருக்கிறது.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்குத் தென்னிந்தியாவின் 'சிறந்த தன் திறன் செயல்பாட்டு நகரம்' விருது வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது.

குகன்
குகன்

மத்திய அரசு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள நகரங்களுக்கிடையே 2006 முதல் ஆண்டுதோறும் 'ஸ்வச் சர்வேக்‌ஷன்' என்னும் தூய்மை நகரப் போட்டி நடத்தி பல்வேறு விருதுகள் வழங்கி நகரங்களை ஊக்கப்படுத்திவருகிறது. அதேபோலச் சிறப்பாகச் செயல்படும் மாநில அரசுக்கும் விருது வழங்கிவருகிறது.

அந்த வகையில், ஜூலை 2020 முதல் ஜூன் 2021 காலகட்டத்தில் இந்திய நகரங்களில் 'தூய்மைப் பணிகள்' சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட நகரங்களின் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது . இந்த நிலையில், தற்போது தூய்மை நகரங்கள் போட்டி முடிவுகளைக் குடியரசுத் தலைவர் வெளியிட்டிருக்கிறார்.

குகன்
குகன்

குடியரசுத் தலைவர் அறிவித்த சர்வே முடிவுகளில், இந்திய நகரங்களில் மக்கள்தொகை 25,000 எண்ணிக்கைக்குக் குறைவான நகரங்கள் பிரிவில் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தமிழ்நாடு அளவில் முதல் இடமும், தென்னிந்திய அளவில் இரண்டாம் இடமும் பிடித்து அசத்தியிருக்கிறது.

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்குத் தென்னிந்தியாவின் 'சிறந்த தன் தனித்திறன் செயல்பாட்டு நகரம்' விருதை மத்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா வழங்க, தூய்மைப் போட்டி நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய முந்தைய செயல் அலுவலர் குகன், தற்போதைய செயல் அலுவலர் பிரகாஷ் இருவரும் பெற்றுக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியின் முன்னாள் செயல் அலுவலர் குகன் பணிக் காலத்தில், தூய்மைப் பணியாளர்களின் உழைப்பாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் பேரூராட்சியைத் தூய்மையான நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னாள் செயல் அலுவலர் குகன், பணியாளர்களை ஊக்கமூட்டி நகர் முழுவதும் தூய்மை செய்ததுடன், இயற்கை உரம் தயாரித்தல் , குப்பையில் வரும் தேங்காய் ஓடுகளில் மருந்து தயாரித்தல், பொதுமக்கள் குப்பையில் ஆடைகளை வீசாமல் இருக்க, பழைய துணிகளைச் சேகரித்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்புதல், வீட்டில் உரம் தயாரிக்க விழிப்புணர்வு செய்வது எனப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

வைத்தீஸ்வரன் கோயில்
வைத்தீஸ்வரன் கோயில்

அதேபோல, மாடித் தோட்டம் போட்டிகள் , குப்பைகளைத் தரம் பிரித்து அதில் வரும் வருமானத்தில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பொதுமக்களின் புகார்களை வாட்ஸ்அப் மூலம் பெற்றுத் தீர்த்துவைத்தல் எனப் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். குகன் இதற்கு முன்பு பணிபுரிந்த நகரத்திலும் இரண்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை: சொந்த செலவில் வாகனத்தில் ஸ்மார்ட் டிவி... வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு