Published:Updated:

``திமுக-வுக்கு தனி தமிழ்நாடு கேட்கும் தைரியம் இருக்கிறதா?” - வானதி சீனிவாசன் காட்டம்

வானதி சீனிவாசன்

``இந்திய நாட்டில் இருந்து பிரிந்து தனி தமிழ்நாடு வேண்டும் என வெளிப்படையாக கேட்கும் தைரியம் திமுக தலைவர்களுக்கு இருக்கிறதா?” - வானதி சீனிவாசன்

``திமுக-வுக்கு தனி தமிழ்நாடு கேட்கும் தைரியம் இருக்கிறதா?” - வானதி சீனிவாசன் காட்டம்

``இந்திய நாட்டில் இருந்து பிரிந்து தனி தமிழ்நாடு வேண்டும் என வெளிப்படையாக கேட்கும் தைரியம் திமுக தலைவர்களுக்கு இருக்கிறதா?” - வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்

தமிழ்நாடு மின் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாலும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவும் மின் கட்டணத்தை உயர்த்துவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

மின்சார கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன போராட்டத்தை நடத்தியது பாஜக. கோவையில் நடந்த போராட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில பொருளாளர் எஸ். ஆர். சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில், ``விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு என்று எதெற்கெல்லாம் மாநிலத்தின் முதலமைச்சர் முன்னர் போராடிக் கொண்டிருந்தாரோ, இப்பொழுது அதே வேலையை அவரே செய்து கொண்டு இருக்கிறார். இதே மின்கட்டண உயர்வின் போது 'நினைத்தாலே ஷாக் அடிக்குது' என்ற பதாகையை வைத்து கொண்டு முதல்வர் போராடினார். ஆனால் இன்று வரலாறு காணாத மின் கட்டண உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு காரணமாக, 10 ஆண்டுகளாக இருந்த நஷ்டத்தை நாங்கள் சுமக்கிறோம் என்று கூறுகிறார்கள். அடுத்ததாக மத்திய அரசு சொன்னதால் நாங்கள் விலையை ஏற்றுகிறோம் என்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் மாதாமாதம் மின் கட்டணத்தை கணக்கிடுவோம் என்றும் பெண்களுக்கு ரூ. 1,000 தருவோம் என்றும் கூறி ஏமாற்றினார்கள்.

``திமுக-வுக்கு தனி தமிழ்நாடு கேட்கும் தைரியம் இருக்கிறதா?” - வானதி சீனிவாசன் காட்டம்

அதுமட்டுமல்லாமல் கழுத்தில் இருக்கும் நகைகளை எல்லாம் வங்கியில் வையுங்கள். நாங்கள் உங்களுக்கு கடன் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினார்கள். ஏழைகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகைகளை எல்லாம் வங்கியில் வைத்த பிறகு நாங்கள் கடன் தள்ளுபடி அனைவருக்கும் சொல்லவில்லை என்று பொய் சொன்னார்கள். ஆக பொய், பித்தலாட்டம் என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் டி.என்.ஏ-விலே இருக்கிறது என்று தெரிகிறது.

ஒரு அரசிடம் மக்கள் சட்ட ஒழுங்கையும், ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத ஆட்சியையும் எதிர்பார்க்கிறார்கள். தெற்கு தொகுதி, ரேஸ் கோர்ஸ் ரோடு என எந்த ரோட்டில் போனாலும் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதைப்பற்றி எப்போது சட்டப்பேரவையில் கேட்டாலும், பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ. 200 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறுகிறார். அந்த ரூ. 200 கோடி எங்கே என்று எங்களுக்கு தெரியவில்லை. இன்னும் சாலைகளும் சரியாகவில்லை. அதிகமாக குளங்கள் உள்ள கோவையில் நல்ல தண்ணீர் 15 நாளுக்கு ஒரு முறைதான் வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு இவர்களுக்கு ஒரு மாத காலம் ஆனது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பிரதமர் மோடி கோவைக்காக ரூ. 500 கோடி ஒதுக்கினார். மேலும் இன்னொரு ரூ. 500 கோடியை வேறு விதங்களில் ஒதுக்கினார். கிட்டத்தட்ட 90% ஸ்மார்ட் சிட்டி வேலைகள் முடிந்த பிறகு, குளங்களை பார்த்தால் ஆகாயத்தாமரை மற்றும் ஆங்காங்கே புல்லும் பூண்டுமாக இருக்கிறது. இதை சரி செய்யவே கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மாநகராட்சி தேர்தலில் சாலைகளை சரிசெய்யாமலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றாமலும் மக்களுக்கு கொலுசுகொடுத்து ஏமாற்றினார்கள். இப்படி மக்களே ஏமாற்றுவதற்காகவே திமுக அரசு நடந்து கொண்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி சம்பவம் மக்களை, நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமோ என்று சந்தேகப்பட வைத்தது. வன்முறையை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் இந்நிலைக்கு மக்களை தள்ளியது திமுக அரசு தான். கோவை சின்ன சின்ன தொழிற்சாலைகள் இயங்கக்கூடிய இடமாகும். இந்த மின்கட்டண உயர்வால் மக்களது செலவு பன்மடங்கு உயரப்போகிறது.

``திமுக-வுக்கு தனி தமிழ்நாடு கேட்கும் தைரியம் இருக்கிறதா?” - வானதி சீனிவாசன் காட்டம்

நீலகிரி எம்.பி ராசா, `பெரியார் வழிக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்’ என்று பேசியுள்ளார். மேலும், `நாங்கள் தனியாக பிரிந்து செல்ல மாநில சுய நிர்ணய கொள்கையை கடைபிடிக்கிறோம். ஆனால் திமுக தலைவர்கள் எல்லாம் மாநில சுயாட்சி கொள்கையை பற்றி அதிகமாக பேசாததால் நாங்கள் பொறுத்து கொண்டு இருக்கிறோம்’ என்று கூறுகிறார். இந்திய நாட்டில் இருந்து பிரிந்து தனி தமிழ்நாடு வெளிப்படையாக கேட்கும் தைரியம் திமுக தலைவர்களுக்கு இருக்கிறதா? என்று பாஜக சார்பாக சவால்விடுகிறோம்.

கோவையில் இருந்து சேலம் வரை கொங்கு நாடு கேட்பதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டித்தரும் கோவையில் நல்ல விமான நிலையம் கிடையாது, நல்ல இணைப்பு கிடையாது, தொழிற்சாலைகள் அமைக்க பிராந்திய திட்டமிடல் ஆணையம் கிடையாது. இதனால்தான் சில இயக்கங்கள் கொங்கு நாடு கோரிக்கையை வைக்கிறது. இப்படி அதிக வருவாய் தரும் மாவட்டங்களை புறக்கணிக்கும் போது நிர்வாக வசதிக்காக இவ்வாறு பிரித்து கொள்ளலாம் என்ற கருத்தை எங்களது சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

பாஜக போராட்டம்
பாஜக போராட்டம்

ஆனால் நீங்கள் தனி தமிழ்நாடு கேட்டு பிரிவினைவாதத்தை தூண்டுகிறீர்கள். இப்போதுவரை TANGEDCO மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பணம் தருவதில்லை. தமிழகத்தை இருளில் தள்ளாமல் பிரதமர் மோடி தான் TANGEDCO-விற்கு ஜாமீன் தந்து வருகிறார். நஷ்டத்தில் செல்லாமல் பயனாளர்களை தேர்ந்தெடுத்து இலவசம் வழங்குமாறுதான் மத்திய அரசு கூறுகிறது. யாருடைய உதவியும் இல்லாமல் மின் தேவையை பூர்த்தி செய்து கொள்வோம் என்று உங்களால் கூறமுடியுமா? இதைவிடுத்து மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள்.

சொத்துவரி இப்போது உயர்த்தி இருக்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே நீங்கள் பேசியதை ரெகார்ட் செய்து வைத்திருப்பார்கள். அதில் நீங்கள் சொத்துவரி குறித்து பேசியதை ரீவைன்ட் செய்து பாருங்கள். ஆக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு. தமிழ்நாட்டில் எந்த விலை உயர்வு வந்தாலும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தான் காரணம். சில நாள்களுக்குமுன் தமிழகத்தில் டாஸ்மாக்கில் மதுபானம் விலை ஏற்றியாதாக படித்தேன். அதை பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி எதுவும் பேசவில்லை. ஏனெனில் சரக்கு விலை ஏற்றினால் தமிழக அரசுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் இப்போது கடனை திருப்பி கொடுக்கவேண்டும். அதனால் மத்திய அரசின் மீது பழி போடுகிறார்கள். ஆட்சிக்கு வந்த முதல் 6 மாதங்கள் அமைதியாக இருந்தார்கள். ஆனால் இப்போது துண்டு போட்டு லஞ்சத்தை அள்ளி செல்கிறார்கள். மண் அள்ளவேண்டுமானால் முதலில் ஆபீசர்கள் கையெழுத்து போட்டுவார்கள். ஆனால் இன்று திமுககாரர்கள் ஸ்லிப் தருகின்றனர். இது நியாயமான ஆட்சியா?” என்று கொதித்தார் வானதி.