Published:Updated:

`பிரியாணி செய்பவருக்கு தக்காளி சட்னி வராது!'-பாஜக-வினர் பேச்சு குறித்த கேள்விக்கு வானதி `அடடே’ பதில்

வானதி சீனிவாசன்
News
வானதி சீனிவாசன்

``ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தில் வல்லுநராக இருப்பார்கள். அதைப் பற்றி அவர்கள் பேசுவதில் தவறில்லையே...” - வானதி சீனிவாசன்.

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கிவருகின்றன. கயிறு சம்பந்தமான பொருள்களை ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்துகொண்டிருக்கின்றன.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவை குறு, சிறு தொழிற்சாலைகளாக செயல்பட்டுவருகின்றன. பொதுவாக இது போன்ற குறு, சிறு நிறுவனங்கள் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஆனால், சமீபத்தில் அது ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியுள்ளனர்.

சுற்றுசூழல், மக்கள் உடல்நலம் முக்கியம். அதேநேரத்தில் அந்தத் துறையில் வளர்ச்சி தடைப்படாமல் இருக்க அரசு உதவி செய்ய வேண்டும். அந்தச் குறு, சிறு நிறுவனங்களிடம், அமைச்சர்கள் பெயரைச் சொல்லி நிறைய தொகையை வசூலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வர், இதைச் சரிசெய்து அந்தத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்.

தென்னை நார்
தென்னை நார்

ஜனவரி 1-ம் தேதி முதல் கைதத்தறி ரகங்களுக்கு 12 சதவிகிதம் ஜி.எஸ்.டி உயர்த்தி ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கைத்தறி நெசவு அதிகம் உள்ளன. எனவே, அதிலிருந்து கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

15 நாள்களுக்கு முன்பு கேரளா குருவாயூர் சென்றிருந்தபோது, அங்கு படுகொலை செய்யப்பட்ட இரண்டு குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு வந்தேன். அங்கு மதத் தீவிரவாதத்தை வளர்க்கும் குழுக்களுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆதரவளித்துவருகிறது.

கொலை (சித்திரிக்கப்பட்ட படம்)
கொலை (சித்திரிக்கப்பட்ட படம்)

இதன் காரணமாக அங்கு படுகொலைகள் தொடர்ந்துகொண்டிருப்பது வேதனையளிக்கிறது. இதை அந்நிய நாட்டில் திட்டமிட்டுக்கூட நடத்தப்பட்டிருக்கலாம். எனவே, இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும்.” என்றார்.

"பாஜக தலைவர்களில் சிலர் பொருளாதாரம், மக்கள் பிரச்னையைப் பேசுகிறார்கள். சிலர் மதம் சார்ந்து மட்டுமே பேசுகிறார்களே?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``என் அம்மா இட்லிக்கு நல்ல தக்காளி சட்னி செய்வார். என் அண்ணி பிரியாணி நன்கு செய்வார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பிரியாணி செய்பவரை தக்காளிச் சட்னி செய்யச் சொன்னால் வராது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தில் வல்லுநராக இருப்பார்கள். அதைப் பற்றிப் பேசுவதில் தவறில்லையே" என்று பதிலளித்தார்.