கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசன் கோவை புலியகுளம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்த சங்கடங்களும் வரக்கூடாது என்பதில் சபாநாயகர் உறுதியாக இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அங்கு எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம். நாங்கள் பேசுவது நேரலையில் முழுமையாக வருவதில்லை. கேட்டால் தொழில்நுட்பக் கோளாறு என்கிறார்கள்.
நான் பேசுவதைக் கூட நறுக்கி, நறுக்கி சில விஷயத்தை மட்டும்தான் காட்டுகின்றனர். அமைச்சர்கள் பதிலளிப்பதை முழுமையாக ஒளிபரப்பு செய்கின்றனர். இதனால் மக்களுக்கு நாங்கள் என்ன பேசுகிறோம் என்றே தெரிவதில்லை.

சபைக்குறிப்பில் நீக்கம் தொடர்பான கருத்துகளை விட்டுவிட்டு, அனைத்தையும் ஒளிபரப்ப வேண்டும். இலங்கைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதே நேரத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை கேள்வி கேட்டுத்தான் ஆக வேண்டும். முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்ததற்கு, நீங்கள் சொல்கிற மாடலுக்கும் பங்குண்டு.

உங்களது கடந்த காலத்தையும் நினைத்துப் பாருங்கள் என்று குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொரு பெண் தொழில் முனைவோரையும் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.” என்றார்.